ஒருபக்க காதல்கதை பாகம்-18

அடுத்தநாள் காலை எப்பொழுதும்போல் குரல்கொடுக்க கிளம்பியது குயில்..

போகும்வழியில் பாதியளவில் இடைமறித்து நின்றான் அவன், கண்டதும் நிழலில் வண்டி நின்றது


அவன்: உன்கிட்ட கொஞ்சம் பேசணும்

அவள்: நீ வண்டிய நிறுத்திய வேகத்துலேயே தெரிஞ்சுது..சொல்லு

அவன்: என்ன முயற்சி பண்ற..முத்தம் கொடுக்குற..ஒண்ணுமில்லன்னு சொல்ற.. வீட்டுக்கு வர..என்ன வேணும் ?

அவள்: எனக்கு என்ன வேணும்ங்கிறது இருக்கட்டும் உனக்கு என்ன வேணும் ?எதுக்கு எல்லாத்தையும் முடிச்சுபோட்டுக்குற? நான் என்ன நினைக்கிறேன்னு கண்டுபிடிக்க இவ்ளோ யோசிக்கிறியா?

அவன்: உன் மனசுல ஒன்னு வெச்சுகிட்டு தான் இதெல்லாம் பண்றனு நல்லா தெரியுது

அவள்: நான் செய்றதுக்கு என்னால விளக்கம் கொடுக்க முடியும் ..நீ நெனைக்குறதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது..

அவன்: என்ன கோவப்படுத்துற மாதிரியே பேசுறியே..என்ன..இதுதான் நானா இல்ல நீ கெடைக்கணும்ங்கிறதுக்காக நடிக்கிறேனான்னு பாக்குறியா ?


அவள்: உனக்கு பரிட்சை வெக்கிற அளவுக்கு எனக்கு நேரம் இல்ல..உன்மேல எனக்கு நீ நெனைக்குற எதுமே தோணல

அவன்: அப்போ முத்தம் கொடுத்தியே ?

அவள்: ஒரு குழந்தை ஒழுங்கா தமிழ்ல பேசினாகூடத்தான் கொடுப்பேன்..முத்தத்துக்கு பின்னாடி அன்புதான் காரணம்..சினிமாவும் சுத்தி இருக்குறவங்களும் அர்த்தத்தை மாத்தி வெச்சிருக்காங்க

அவன்: எதுக்கு எங்கம்மாவை பாக்க வந்த?..அவங்கள பாக்குற சாக்குல என்ன பார்க்கலாம்னுதான ?

அவள்: நான் பண்ற எல்லாத்துக்கும் ஒரே அர்த்தம்தான்..அந்த அர்த்தத்தை உனக்கு புடிச்சா மாதிரி மாத்த நினைக்காத

அவன்: இப்ப நான் என்ன பண்ணட்டும் ..?..ஒரு மாதிரி உள்ள உரசிட்டே இருக்கு..உன் முகம் அடிக்கடி வந்து போகுது..நீ அழகா இருக்கன்னு நம்ப வெக்குது.உன் .உன்னோட வாழலாம்னு .....(கை நீட்டி வாய்பொத்தினாள் )

அரை இன்ச் இடைவெளியில் அவன் கண் பார்த்து ....



அவள்: இந்த வாரம் உனக்கு வேல இல்லல அதான் வேற எதுவும் இல்லாம இதெல்லாம் உனக்கு தோணுது ..பொய் முழுமூச்சா வேலைய பாரு..இதெல்லாம்தானா போய்டும்..


எனக்கூறி எப்பொழுதும்போல் சிறுபுன்னகை தவழ்ந்து..மறு வார்த்தை பேசாமல் சென்றாள் ...

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (10-Feb-17, 11:36 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 383

மேலே