மாண்புமிகு குப்பாயி

சின்ன எசமான்

வந்து....வந்து...
😊😊😊😊😊
வாங்க குப்பாயி அக்கா.

எனனமோ சொல்லத்

தயங்கறீங்க. பட்டுன்னு

சொல்லுங்க குப்பாயி

அக்கா.
☺☺☺☺
சின்ன எசமான் நா உங்க

காகஸ்

(caucus) தோட்ட

மாளிகையில

நாப்பது வருசா

வேலைக்காரியா


இருக்குறேன். பெரிய

அய்யாவுக்கும்

அம்மாவுக்கும்

கல்யாணம் ஆகறதுக்கு

முன்னாடியே நா இந்த

மாளிகை

வேலைக்காரியா

சேந்தேன்.

எல்லாம் என்ன உங்க

குடும்பத்தில ஒருத்தியா

பாத்துக்குறீங்க.

அம்மாகூட என்ன

அக்கா-ன்னுதான்

கூப்புடுவாங்க.

அம்மாவும் அய்யாவும்

கண்ண

மூடி சரியா பத்து வருசம்

ஆகுதுங்க. சின்னம்மாவும்

நீங்களும் என்ன உங்க

உடன்பிறவாத சகோதரி

மாதிரிதான் நடத்தறீங்க.

😊😊😊😊😊


அதெல்லாம் தெரியுதுங்க

குப்பாயி அக்கா. நீங்க

கல்யாணம்

ஆகி மூணு மாசத்திலேயே

உங்களுக்கு வாக்குப்பட்ட

உங்க

குடிகார ரவுடி புருசன

தொரத்திட்டு வந்து எங்க

குடும்பத்தில எங்க அம்மா

அப்பாவுக்கும் எனக்கும்

சின்ன

அம்மாவுக்கும்

உடன்பிறவா

சகோதரியா தியாக

வாழ்க்கை

வாழ்ந்துட்டு

இருக்குறீங்க.. நாங்க

ரொம்ப பாக்கியம்

செஞ்சவங்க

குப்பாயி அக்கா. சரி நீங்க

எதோ

சொல்ல வந்தீங்களே,

அதச்

சொல்லுங்க அக்கா.
😊😊😊

சின்ன எசமான் நாளைக்கு

என்னோட பொறந்த

நாளுங்க....
😊😊😊😊
அது எங்களுக்குத்

தெரியும்

குப்பாயா அக்கா.

ஒவ்வொரு


வருசம் நாம

கொண்டாடறதுதானே.

உங்களுக்கு துணி

எல்லாம்

எடுத்தாச்சு. கேக்கு,

இனிப்புப்

பலகாரம் எல்லாம்

காலைல 7.00

மணிக்கே வந்துடும்.
😊😊😊

அதெல்லாம் எனக்கு

தெரியமுங்க

சின்ன எசமான். எனக்கு

ஒரு

ஆசைங்க.....
😊😊😊😊
அக்கா குப்பாயி அக்கா

உங்க

ஆசை எதா இருந்தாலும்

தயங்காம சொல்லுங்க.

இந்த

வயிசல உங்களுக்கு

கல்யாண

ஆசை இருக்காது. நகை

நட்டு

வேணும்னா சொல்லுங்க

அக்கா.
☺☺☺☺☺
சின்ன எசமான் நீங்களும்

சின்ன

அம்மாவும் என்ன சொந்த

சகோதரியா பாவிச்சு

நெறைய

நகை நட்டெல்லாம்

வாங்கிக்

குடுத்திருக்கறீங்க.

என்னோட

ஆசை...என்னோட ஆசை

நாளைக்கு என்ன...
😊😊😊😊
சொல்லுங்க குப்பாயி

அக்கா.

வந்து, போயின்னு ஏன்

இழுத்துட்டு இருக்கறீங்க.


😊😊😊😊
நாளைக்குக் காலைல

புதுத்துணி

கட்டிட்டு நான் உங்க

கால்லயும்,

சின்ன அம்மா கால்லயும்

விழுந்து

கும்பிட்டு உங்க ரண்டு

பேரோட

வாழ்த்தையும்

வாங்கிக்கணுமுங்க

சின்ன

எசமான்.
😊😊😊
குப்பாயி அக்கா நீங்க

இப்பிடி

சொல்லறது

கொஞ்சங்கூட

நல்லா இல்லீங்க அக்கா.

நீங்க

என்ன எடுத்து தாய்

மாதிரி பாசம்

காட்டி வளத்தவங்க. நீங்க

போயி

கால்ல விழுந்து

வணங்குறேன்னு

சொன்னது எங்களக்

கேவலப்படுத்தற மாதிரி

இருக்குது. இனிமே அது

மாதிரி

பெரிய பெரிய

வார்த்தையை

எல்லாம்

சொல்லக்கூடாது.


பெத்தவங்க கால்ல,

ஆசிரியருங்க

கால்ல, ஆன்றோர்கள்,

சான்றோர்கள்

கால்லயும்சாமி

சிலைக்கு முன்னாடியும்

விழுந்து

வணங்கறதை

மட்டுந்தான்

மனுசங்க செய்யணும்.

நானும்

தாமரையும் ஆறறிவு

உள்ளவங்க.

சுயலாபம் தேட

நெனைக்கறவங்கதான்

கண்டவங்க கால்ல

விழுந்து

வணங்குவாங்க. வேற

என்ன

ஜ் ஆசைன்னு சொல்லுங்க

குப்பாயி அக்கா.
😊😊😊😊
சின்ன எசமான்

நாளைக்கு.மட்டும்

நான் கேக்கு

வெட்டறபோது

"மாண்புமிகு

குப்பாயிக்கு

இனிய பிற்ந்த நாள்

வாழ்த்துக்கள்'-ன்னு

நீங்களும்

சின்ன அம்மாவும் என்ன

வாழ்த்தணுங்க சின்ன

எசமான்.
😊😊😊😊
அக்கா குப்பாயி அக்கா

இதச்

சொல்லவா பல தடவை

"வந்து,

போயி"ன்னுட்டு

இருந்தீங்க.

அக்கா, மாணவன்ங்கற

சொல்லே

மாண்புமிக்கவன் என்ற


சொல்லில் இருந்து

வந்ததுதான்.

சமீபத்தில நம்ம

மாண்புமிகு

தமிழக மாணவர்கள்

உலகமே

பாத்து வியக்கற

அளவுக்கு

அறவழிப் போராட்டம்

நடத்துனாங்களே

பாத்தீங்க

இல்லையா? நீங்க எங்க

காகஸ்

தோட்ட மாளிகையில

மாண்புமிக்க பெரிய

மனுசியாத்தான்

நடந்துக்கறீங்க.

நாளைக்கு என்ன,

இப்பவே சொல்லறனே.

"மாண்புமிகு குப்பாயி

அக்கா

இப்ப மணி பத்து ஆகுது.

உங்க

அறைக்குப் போயி

தூங்குங்க.


இனிமே எங்களுக்கு

நீங்க

மாண்புமிகு குப்பாயி

அக்காதான்.


😊😊😊😊


சின்ன எசமான் நீங்களும்

சின்ன

அம்மாவும், என்னோட

இதயதெய்வங்கங்கள்

அய்யா.


😊😊😊😊😊😊
குப்பாயி அக்கா

தயவுசெய்து அந்த

கொத்தடிமைத்தன

வார்த்தைய

எல்லாம் சொல்லாதீங்க.


அந்த மாதிரி

சொல்லறவங்க

எல்லாம் சுயநலவாதிங்க.

நீங்க

அவுங்களவிட ஆயிரம்

மடங்கு

உயர்ந்தவங்க.

😊😊😊😊


ரொம்ப நன்றீங்க. சின்ன

எசமான்.

எழுதியவர் : மலர் (11-Feb-17, 1:09 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : maanbumigu Kupaayi
பார்வை : 244

மேலே