கண்ணீரை விதைத்தான்

பெத்தவங்கள கதற விட்டிட்டு போனானே
கூடபுறந்தவங்கள அழ விட்டிட்டு போனானே
பொஞ்சாதிய நினச்சு பாக்காம போனானே
புள்ளகுட்டிகள துடிக்கவிட்டிட்டு போனானே
கோழி ஆட்ட மாட்ட விட்டிட்டு போனானே
வளத்தின கிராமத்தயும் விட்டிட்டு போனோனே
எஙகே போனான்? எதுக்காக போனான்?

ஊரு விட்டு ஊருபோயி
நாடு விட்டு நாடு போயி-அவன்
காசு பணம் சேக்கதுக்க போனான்
பஞ்சுமெத்தயில தூங்கதுக்கா போனான்
பட்டாடபோட்டு மகிழேதுக்கா போனான்
காரு பங்களா வாங்கதுக்கா போனான்
உல்லாசமா வாழதுக்கா போனான்
எதுக்காக போனான் அவன்-
ரசாத்தி மகன்
எதுக்காக போனானுல?

கம்மாங்கரையில வீணா திரிஞ்சானா ?
காயற வெயிலில உழுது மேஞ்சான்
விதச்சான் விதையெல்லாம்
அவன் வயத்துக்காகவா?
உழைப்பில ஏதாச்சும் குறயும் வைக்கல்லியே
காலணி மாட்டிகிட்டு சுத்தம் பாக்கற பயலாயா?
காலுரெண்டுமா வெச்சான்
சகுதியில ரெண்டு கையயும்
வானத்த பாத்து கொஞ்சமா அவன் அழுதான்
வாங்கின கடனுக்கு ஏசாம விட்டானுகளா?
எதுக்காக அவன் அழுதான்?
அவன் என்ன தப்பு செஞ்சான்?
தட்டில சோத்தவெச்சவன் வயத்தில
யார் அடிச்சா?

மிச்சமிருந்ந. கிணறு குளத்து நீீரில
மண்ண நனச்சாலும்
விளச்சலுக்கு போதாதய்யா சாமி
குளமும் வறண்டு ஏரியும் வறண்டு
பயிரும் கருகி போச்சு
உழைப்பும் வீணா போச்சு
மனசும் பஞ்சா வெடிச்சு
மண்ணாத்தான் அவன் போனான்
பூச்சி மருந்து குடிச்சு
அவன் தோழனும் போனான்
சாகுபடி பொய்த்தது..
சாகும்படியானது...

ருசிச்சு சாப்பிடவெச்சவங்கவங்க
பரம்பரையா கோடி உசுருகள
கொஞ்சமாச்சும் இரக்கமிருந்தா
உங்க கண்ணீராவது அவங்க
உழுத மண்ண நனைக்கடுங்க
பயிருவெளஞ்சு உயிர காக்கட்டமுங்க
படிச்ச புத்திசாலி நீங்க -நாங்க
என்ன சொல்லி புரியவைக்க
தாகத்தோடு வறண்டிருக்கிற வயல பாருங்க
தவிக்கும் விவசாயின் துயரத்த பாருங்க
தாமதமின்றி தண்ணீர் பிரச்சனைக்கு. முடிவெடுங்க ஐயா...

எழுதியவர் : Rajeswariskumar (11-Feb-17, 1:47 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 181

மேலே