தாவணி கட்டும் பெண்ணே

எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு

"கொடுத்த தலைப்பில்"

கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..

"தாவணி கட்டிய பெண்ணே"
==========================


தாவணி கட்டிய பெண்ணேயுன் அழகைப்போல..
தரணியில் எங்கும்நான் இதுவரை கண்டதில்லை!

சீராகஎண்ணையிட்டு சிக்கலில்லாமல் முடியை..
விரல்நுனியில் கோதிஅதை தாவணிக்குப் பின்னாலே..

நீ போட்ட சிறுமுடிச்சு முடியை மட்டுமல்லாமல்..
என் மனதையும் சேர்த்தல்லவா கட்டுகிறது!

சிறுமுடியில் சிட்டுக்குருவி வால்போலே..
சிக்கெனத் தூக்கிய சிங்காரமுடியிடையில்..

துளிநீளம் நிறத்துணி சேர்த்துக்கட்டி..
தூமலரொன்றைச் செருகிய உன் அழகைக் கண்டு..

சீறிப் பாயும் இளைஞர்களும் உனைப்பார்க்க..
சிறிது நேரம் நிற்பார்களெனைப்போல திருட்டுத்தனமாக..

பருவமங்கையான நீயும் என்பார்வைக்கே..
பொன்மயில்தோகை போன்றே ஜடையிட்டுநீ...

துள்ளிவரும் மான்போல..காற்றில் பறந்துவந்து..
என்மனதை அள்ளிச் செல்லும் தாவணிதான் உனக்கழகு..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (11-Feb-17, 3:29 pm)
பார்வை : 301

மேலே