சபதம்

குற்றங்களைச் சுட்டிக்காட்டி எழுதுவேன், குற்றவாளி அந்த கடவுளேயாயினும்....

எமது நோக்கம் குற்றங்களைக் களைவதும், மனிதநேயம் வளர்ப்பதுமே....

ஒழுக்கம் தவறிய எவருக்கும் வையக வாழ்வே நரகமாகுமே....
அந்நரக வாழ்க்கை வேண்டாமென்றே யாவருக்கும் அறிவுறுத்துகிறேன்....

நான் யாருக்கும் பகைவன் அல்ல...
அனைவரையும் குற்றமில்லாது நேசிக்கும் அன்பன்....

உயிரை எடுக்கும் கலாச்சாரம், பாரம்பரியம் தேவையில்லை...
உயிர்களை குறைவின்றி ஆனந்தமாக வாழ்விக்கும் கலாச்சாரம், பண்பாடு வேண்டும்....

இயற்கையோடு இசைந்து வாழ வேண்டும்....
இல்லையேல் இயற்கை உன்னைப் பாதிக்கும்....
குடிக்க நீர் இருக்காது....
உண்ண உணவு இருக்காது....
இதுவொன்றும் மிரட்டல் அல்ல....
சபதம்....

இயற்கையின் சபதம்....
தன்னைத் தானே அடக்க இயலாத கோழைகளே!
உணர்ச்சி பெருக்கால் தவறு செய்யாதீர்கள்....
அந்தத் தவறை உணரும் போது ஆன்ம நிம்மதியிழந்து, உடல் கெட்டு நலிவுற்றுப் போயிருக்கும்....

செல்வமேதும் நிலைக்கப் போவதில்லையே, நற்சிந்தனையுடைய பகுத்தறிவு ஒன்றைத் தவிர....

மற்றதெல்லாம் கானல் நீரென்பதால் அவற்றை நாடும் நீங்களெல்லாம் கானல்நீர் போல் காணாமல் போவீர்களே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Feb-17, 2:03 pm)
Tanglish : sabatham
பார்வை : 387

மேலே