எழுதாத டைரி

எழுதாத டைரி

கட்டி வைத்திருந்த
கடந்த ஆண்டுகளின் நாட்குறிப்பேடுகளை
புரட்டிப் பார்க்கிறேன்!

எழுதி நிறைத்த பக்கங்களை விட
எழுதாத வெற்றுப் பக்கங்களே அதிகம்!

எனது கடந்த வருடங்களின்
வாழ்க்கைப் புத்தகப் பக்கங்களை
மனதில்
புரட்டிப் பார்க்கிறேன்.

அவற்றிலும்

முழுமையாக வாழ்ந்து
நிறைத்த பக்கங்களை விட
நிறைக்காத வெற்றுப் பக்கங்களே அதிகம்!

மேசையின் மீது இருக்கும்
இந்த வருட நாட்குறிப்புப் புத்தகத்தின்
இன்னும் எழுதப்படாத ஏடுகள்
காற்றில் சிறகடித்து
என்னை நோக்கி
கண்களைச் சிமிட்டுகின்றன!.

அவைகளையும் ,

வாழ்வின் இந்த வருடப் பக்கங்களையும்

எழுதி நிறைப்பேனா?
எழுதாமல் கழிப்பேனா?

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம் ) (12-Feb-17, 10:13 pm)
Tanglish : eluthatha dairy
பார்வை : 155

மேலே