எளிய இயற்கை மருத்துவம்

1) சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

2) புதினா சாறு, துளசி சாறு, கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெரும்.

3) எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

4) தூதுவளை கீரையை அடிக்கடி சாப்பிட்டால் சளி, தொண்டை வலி, தொண்டை எரிச்சல் சம்பந்தப்பட்ட நோய் குணமாகும்.

5) வெந்தையக் கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.

6) கசகசாவை ஊற வைத்து அரைத்து வாரம் 2 முறை தலையில் தேய்த்து குளித்து வர முடியின் செம்பட்டை நிறம் மாறும்.

7) நெல்லிக்காயை காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து குளித்து வர முடி கருப்பாக மாறும்.

8) அண்ணாச்சி பழ வற்றல்களை பாலில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

9) கீழாநெல்லி வேர் சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர முடி வளரும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (12-Feb-17, 11:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 383

சிறந்த கட்டுரைகள்

மேலே