நீர்த்தேக்கங்கள்-கட்டுரை

உயிரினங்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைக்கு இயற்கையின் ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவையாகும்.
மனிதன் தன் தேவைக்காக நிலத்தில் விவசாயம் செய்து உணவு உற்பத்தியை மேற்கொண்டான். அதில் பசுமைப்புரட்சியும் கண்டான். அந்த பசுமைப்புரட்சி கண்ட அதே வேளையில்….தொழில் புரட்சியின் வாயிலாக, நிலத்தின் பகுதிகளை தன்னகத்தை அடக்கிகொண்டது காலத்தின் சூழலாகும்.
பெரும்பாலான விவசாய நிலங்கள், இயற்கையின் மாறுபாடுகளினால், தொழில்வளத்திற்கு உதவி உணவு உற்பத்தியை குறைத்து விட்டது.
உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசாங்கங்கள் முழுகவனம் செலுத்துவதிலிருந்து விலகி, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பின்னுக்கு தள்ளி விட்டது இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளும்தான். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல.
தொழிற்புரட்சியின் வாயிலாக மக்கள் கண்டது, வளர்ச்சி மட்டுமல்ல, காற்று மாசுபாடும்தான்.
ஒவ்வொரு நாட்டிலும், தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசாங்கங்கள், நீராதாரத்தை வழங்கும் நீர்த்தேக்கங்களின் முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை தராமல், மற்ற திட்டங்களுக்கு தருவதோடு அவர்களின் கடமை முடிந்த்தாகவே நினைத்து கொள்கிறார்கள்.
இன்றைய தலையாய செய்தி அமெரிக்காவின் மிக உயரமான அணைக்கட்டான கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஓரோவில் அணை உடையும் நிலையில் உள்ளதால் அதைச்சுற்றி வசிக்கும் இரண்டு இலட்சத்துக்கும் மேறபட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டிலும், நம் நாட்டைப் போலவே ஒரு கட்சியினர் மற்றோர் கட்சியினரை குற்றம் சாட்டி வருகின்றனராம்.
இதே போன்று ஒரு நிலைமை நம் தமிழகத்திலும், ”செம்பரபாக்கம் நீர்த்தேக்கத்தில்” ஏற்பட்டதல்லவா“ பாதிப்பு நடந்தபோது உச்.உச். கொட்டியதோடு சரி. அதற்கு பிறகு நீர்த்தேக்கத்தை கவனிப்பதற்கு ஆளில்லாமல், அரசியல் ஆர்ப்பாட்டங்களில் மூழ்கிபோனதுதான் நாம் கண்ட பயன்.
கர்மவீர்ர் காமராஜர் காலத்தில் பெரும் ஆணைகள் கட்டப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு, அணைகளின் பராமரிப்பை எந்த அரசும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
”மேகம் சூழ்ந்து புயல் சீற்றத்தின் போதும், பெருமழையின் போதும், இயற்கை நம்மை ஏன் இப்படி வதைக்கிறது என்று புலம்பிவிட்டு நகன்று விடுகிறோம்.
இயற்கையின் பலன்களை அனுபவிக்கின்ற நாம், அதை பராமரிக்கும் உரிமையும் இருக்கிறது என்பதை ஏன் மறந்தோம்.
அப்படி மறப்பதால்தான் இயற்கையும், அவ்வப்போது மிரட்டி பயமுறுத்துகிறது என்றே நினைக்க வேண்டியதாகிறது.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (14-Feb-17, 9:24 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 1246

மேலே