என் காதல் உன்னோடு தான்

இக்கதையின் தலைவன்- சதீஷ், தலைவி-ஐஸ்வர்யா.

சதீஷ் அவன் காதலி ஐஸ்வர்யா வை பார்ப்பதற்காக அவள் தினமும் வரும் பேருந்து நிறுத்துமிடத்திற்கு எதிரில் நின்று கொண்டு அவள் வருகைக்காக காத்துகொண்டு இருக்கிறான். அவனோடு இரண்டு நண்பர்களும் இருக்கிறார்கள். சதீஷ் கடந்த ஒரு வருடமாக ஐஸ்வர்யாவை ஒரு தலையாக காதலித்து கொண்டு இருக்கிறான்.

இன்று அவன் காதலை அவளிடம் சொல்ல காத்துகொண்டு இருக்கிறான். ஐஸ்வர்யா படித்து முடித்துவிட்டு ஒரு நல்ல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறாள். அவள் தினமும் வேலைக்கு பேருந்தில் செல்வது தான் வழக்கம்.

ஐஸ்வர்யா பேருந்து நிறுத்துமிடத்திற்கு வருகிறாள். அவள் வருவதை அவன் பார்க்கிறான். அவன் நண்பர்கள் "டேய் அவ வந்துட்டா நீ போய் உன் காதலை சொல்லுனு" சொல்கிறார்கள். அவன் தன் காதலை அவளிடம் சொல்ல அவளருகில் பயந்து பயந்து சென்றுகொண்டு இருக்கிறான். அவளின் அழகான முகத்தை பார்த்ததும் அவனுக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பிக்குறது. அவன் இதயம் துடிப்பது அவனுக்கே கேட்கிறது, முகத்தில் அதிகமாக வியர்வை வருவதை உணர்ந்த அவன் தன் கைகளினால் அதை துடைத்து. அவளருகில் சென்றான், பயத்தின் காரணமாக அவன் தன் காதலை சொல்ல முடியாமல் திரும்பி வந்துவிடுகிறான்.

அவன் திரும்பி வந்ததும் தன் நண்பர்களிடம் தன் காதலை இன்று மாலை சொல்லி விடுகிறேன் என்று சொல்கிறான். தன் காதலை அவளிடம் சொல்வது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்று அவனுக்கு புரிந்துவிட்டது.

மாலை வந்தது, அவளும் வந்தால். இம்முறை கண்டிப்பாக தன் காதலை சொல்லியாக வேண்டுமென்று அவளிடம் சென்றான். பதட்டத்தில் அவன் மூச்சுகாற்று பலமாக வீசுவதை உணர்கிறான், அவன் இதயம் துடிப்பது அவனுக்கு கேட்கிறது. அவளருகில் சென்றவுடன் அவளின் அழகான கண்களை பார்க்கிறான், பதட்டத்தில் பேச வார்த்தை வராதலால் மூச்சு வாங்கியபடியே பளிச்சென்று "நான் உன்னை ஒரு வருடமாக காதலித்து வருகிறேன், உனக்கு என் மீது விருப்பமா" என்று கேட்கிறான். அதற்கு அவள் "எனக்கு உங்கள் மீது விருப்பமில்லை, இனி மேல் என்னை பின் தொடராதிர்கள்" என்று கூறுகிறாள்.

அதை கேட்டதும் அவன் சோகமாய் திரும்பி வந்துவிடுகிறான். இரண்டு நாட்களுக்கு பிறகு மறுபடியும் அவளை பார்க்க பேருந்து நிறுத்துமிடத்திற்கு சென்றான். அதை பார்த்த அவள் அவனை திட்டிவிடுகிறாள்.

அடுத்த நாள் அவன், அவளின் தோழியை மட்டும் சந்திக்கிறான். அவளிடம் ஐஸ்வர்யா வேறு யாரையாவது காதலிக்கிறாளா, ஏன் என் காதலை ஏற்கவில்லை? என்று கேட்கிறான். அதற்கு அவள் தோழி, ஐஸ்வர்யா யாரையும் காதலிகமாட்டால் அதற்கு நான் தான் காரணம். ஏனென்றால், "நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவன் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டான். அதனால் அவளிடம், நான் தான் காதலித்து கஷ்டப்படுகிறேன் நீயாவது காதலிக்காமல் இரு என்று பல முறை அறிவுரை கூறியிருக்கிறேன், மேலும் அவள் நான் படும் கஷ்டத்தை அருகில் இருந்தே பார்த்து இருக்கிறாள். அதனால் அவளுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை" என்று கூறுகிறாள்.

அதை கேட்டதும் சதிஷ் சோகத்துடன் வீடு திரும்பினான். ஆனாலும் அவன் மனம் அவளை மறக்கவும், அவள் இல்லா ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்கவும் இடம் கொடுக்கவில்லை. பலமுறை யோசித்துப்பார்த்து, என்ன ஆனாலும் சரி இனி என் காதல் அவளோடு தான் என்று முடுவு எடுக்கிறான்.

மறுநாள் அவளை பார்க்க அதே பேருந்து நிறுத்துமிடத்திற்கு சென்றான். அவளை பார்த்ததும் அவளிடம் போய் பேசுகிறான். இம்முறை அவனிடம் பயமும், பதட்டமும் இல்லை சோகம் மட்டுமே நிறைந்திருக்கிறது.

அவளிடம், உங்களை நான் மறக்க முடியாது என்று கூறுகிறான். அதற்கு அவள் உங்களை நான் காதலிக்க முடியாது என்று கூறிவிடுகிறாள். ஒரு நாள் என் காதல் உண்மை என்று உங்களுக்கு புரியும். அது வரை நீங்கள் என்னை திட்டினாலும், அடிச்சாலும் என் காதல் உன்னோடு தான், உன்னோடு மட்டும் தான் என்று கூறி அங்கிருந்து கிளம்பி அவன் காதல் பயணத்தை தொடர்கிறான்......

அடுத்த நாளிலிருந்து அவன் தினமும் அவளை பார்க்க வருகிறான். அவன் காதல் உண்மையானதாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும் அது வரை அவன் காத்துகொண்டு இருப்பான்......

எழுதியவர் : சரவணன் (15-Feb-17, 1:20 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 704

மேலே