ராமு-சோமு உரையாடல்= இன்றைய அரசாட்சி,கட்சியினர், தலைவர்கள்-ஒரு கண்ணோட்டம்,---சிந்திக்க, சிரிக்க

சோமு : ஐயா ராமு ஐயா ; நீங்க என்னோட மூத்தவரு, மெத்த
பிடித்தவாறு, உலகம் அறிந்தவரு, நம்ம ஊரு தலைவரு
ஐயா நான் உங்கள ஒன்னு கேக்கறேன் கோச்சிக்கமாடீங்களே

ராமு : டேய் சோமு நீ படிக்கலைனா கூட புத்தி கூர்மை உள்ளவன்
கேக்கவந்ததை கேளு

சோமு : அந்த காலத்தில் காமராஜர் போன்ற ஆன்றோர் தலைவர்களாய்
நாட்டின் நலன் மட்டுமே கருத்தில் வைத்துக்கொண்டு நாட்டை
ஆண்டார்கள், நாடும், உலகமும் புகழ நாட்டிற்கே வாழ்ந்தார்கள்
தியாகிகளாய்; இவர்கள் பள்ளிச்சென்று அதிகம் படிக்கவில்லைதான்
ஆனாலும் அரசியலிலும், அரசாள்வதிலும் மா மேதைகளாய்
இருந்தார்கள் -

இன்று ஐயகோ, சில சுயநலவாதிகள், எப்படியோ பணம் சொத்து
சேர்த்து, அரசியலில் நுழைந்து குட்டையை குழப்புகிறார்கள்
அதிக படிப்பறிவும் இல்லாத இவர்கள் நாட்டை ஆள துடிக்கிறார்கள்
நாட்டின் நலனை கருதி அல்ல ; தங்களுக்கு எப்படியோ பெரும்
புகழும் வரவேண்டும், ஆள்வது ஒரு குடும்ப போகமாவது, சொத்து
குவிக்க என்று கருதி அலைகிறார்கள் ; மக்கள் இவர்களை நம்பி
ஏமாறுகிறார்கள் என்ன செய்வது

ஐயா படிப்பு அதிகம் இலாதவறெல்லாம் அறிவாளிகள் ஆவது இல்லை
அதே போல் படித்தவரெல்லாம் அறிவாளிகள் இல்லை; பகுத்தறிவும்
தேசாபிமானம்,பண்பு, சுயநலம் இன்மை தான் ஒரு யுகத்
தலைவனை தரும்

ஆக எல்லாரும் நாட்டை ஆள துடிப்பது ................
அரசியலை வியாபாரம் ஆக்குவதாகும்
அதையே ஒரு குடும்ப பிரச்னையையாய் நினைப்பது
மக்களை ஏமாற்றும் மா பெரும் கொடுமை................

ஐயா நான் கூறுவதில் தவறு இருக்கிறதா ஐயா

ராமு : உன்னைப் போன்றார், அந்த அற சிந்தனையினர்
கட்சி தொண்டர்களை இருப்பின் கட்சி முன்னேறும்
நாடு முன்னேறும், மக்கள் முன்னேறுவர் நலம் பெறுவார்
இன்று பணம் செய்வது எப்படி என்றுதான் கட்சிக்காரர்கள்
கட்சிக்கு, தனக்கும் ................மக்கள் நலம் இவர்களுக்கு
ரெண்டாம் பட்சம் ....................மக்கள் இதை உணர வேண்டும்
நல்லோரை அறிந்து தேர்ந்தெடுத்தால் நாடு நலம்பெறும்
தீயோர் நலிவர்.............அழிவர்.................

உன் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன் சோமு .......
நீ உயர்ந்தவன்

சோமு ; நன்றி ஐயா ...............ஆட்டுக்கு தீனி போடணும்
நான் வராங்க ஐயா .........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Feb-17, 1:30 pm)
பார்வை : 287

மேலே