அனுபவம்

அன்றும் உலகில் வாழ்ந்தவர்கள்
எண் குணம் கொண்ட யோக்கியர்கள் தான்
அவர்களை தொடர்பு படுத்தி பேச தேவையில்லை
இவ்வுலகில் குணம் பெற முயற்சிப்பவர்கள்...!

நீங்கள் நீங்களாக இருங்கள்
உங்கள் குணத்தை பிறர் மீது
திணிப்பது பாவத்தினும் கொடிய செயல்
என்பதை உணருங்கள்...!

உங்கள் வழியில் வந்தவர்கள் தான்
உங்களுக்காக வந்தவர்கள் இல்லை...!
அனுபவம்...நீங்கள் செய்த தவறுகளை
மூடி மறைக்க பயன்படும் அழகான வார்த்தை...!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (15-Feb-17, 10:46 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : anupavam
பார்வை : 364

மேலே