நின்றன் சிரிப்பொலியில்

சின்ன சின்னதாய்
அழகழகாய்
குட்டிக் குட்டி
வானவிற் கூட்டங்கள்
பஞ்சு மிட்டாய்
காது வளையங்கள்
இளம் பச்சை
தலை மாட்டி
கொத்து ரோஜாக்கள்
அலங்கரிக்கும் கழுத்தில்
கடலின் முத்துக்கள்
ஒன்றாகி உன் சிரிப்பானதோ
அழகுக் குட்டிச்செல்லம்
உன் கண்களுக்கு
தீட்டிய மை
வைகறையில் கலந்ததோ
வலது கை கன்னம் தாங்கி
இடம் நோக்கும் விழிகளுக்கு
என்னில் என்ன தேடல்
நீ எழு
வான் நோக்கு
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களில்
ஒன்றைக் கூடக் காணவில்லை!

-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (16-Feb-17, 11:56 am)
சேர்த்தது : கார்த்திகா
பார்வை : 129

மேலே