கண்ணன் என் தெய்வம்

கண்ணன் மாயந்தான்
கண்ணுக்கு தெரியாத
வேதத்தின் உட்பொருள்
வேதமே கண்ணன்

கண்ணா கண்ணா -என்று
மெய்யுருக பாடி
அழைப்பார்க்கு
கண்முன்னே வந்து
நிற்பான் மாயக கண்ணன்
நீல மேக சியாமலனாய்
புல்லாங்குழல் ஏந்தும்
கோவிந்த கோபாலனாய்
வேங்கட கிருஷ்ணனாய்
பார்த்தனுக்கு சாரதியாய்
யதுகுல திலகனாய்
கலியுக தெய்வமாய்

கண்ணுக்கு தெரியா
பேரொளி என்றாலும்
அந்தர்யாமி அவன்
கல்லிலும்,மண்ணிலும்
நீரிலும் நெருப்பிலும்
விண்ணிலும் காற்றிலும்
எங்கும் உள்ளான் அன்றோ
வேண்டி நிற்கும் பக்தருக்கு
வித விதமாய்க் காட்சி தரும்
லீலா விநோதன் அவன்
நண்பனாய்,நல் ஆசானாய்
சேவகனாய், , காதலனாய்
யசோதைக்கு சேயாய்
திரௌபதிக்கு காக்கும் தெய்வமாய்
என்றும் நம்பினார்க்கு
ஸ்ரீமன் நாராயணனாய் காட்சி தருவான்
வேய்ங்குழல் கண்ணன்

அருவமாய், உருவமாய்
அருட்பெருஞ்ஜோதியாய்
ஒப்பிலா அப்பனாய்
நந்தா கோபாலனாய்
என் கண் முன்னே
காட்சிதரும் எந்தை
என் தெய்வம்
என் கண்ண பெருமான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Feb-17, 4:57 pm)
Tanglish : Kannan en theivam
பார்வை : 179

மேலே