ஏமாற்றாதே, ஏமாறாதே

என்ன செய்கேன்?
நடப்பது யாவும் விதியன்றோ, என்றெண்ணி புலம்பித் திரிவோமெனில்,
நாமும் மதியற்ற கூட்டத்தில் முதன்மை வரிசையில் வீற்றிருக்கிறோமென்றே பொருள்படுமே....

சக மனிதனை ஏமாற்றி, நாம் அறிவாளி போல் நடித்து வாழ்வதைவிட உண்மையான முட்டாளாக யாரையும் ஏமாற்றாது வாழ்வதே மகத்துவம் வாய்ந்த வாழ்வே.....

பிறரை ஏமாற்றும் அளவிற்கு பணத்தின் மீது மோகமும் இல்லை...
பிறரிடம் கொடுத்து ஏமாற கையில் பணமும் இல்லை....

அன்போடு வாழ,
அத்தியாவசியத் தேவைகள் யாவும் கிடைத்திட நேர்மையான உழைப்பொன்றே போதுமே.....

குறுக்குவழி தேடி, நேர்வழி மறந்தோரெல்லாம் வாழ்வில் நிம்மதியென்பதே காண்பதில்லையே.....

கருணையால் மனமுவந்து உதவுவதற்கே பணமில்லாவிடிலும்,
தனது தேவைகளை நிறைவேற்ற பிறரிடம் கையேந்த வேண்டாமென்றளவிற்கு தனது நேர்மையான உழைப்பில் கிடைத்த பணம் மட்டும் போதுமே....

ஏழை, பணக்காரன் இரண்டில் எவரும் இறுதியில் எய்தப் போவதோ, ஒரு பிடி சாம்பல் மட்டுமே...
அதுவும் கூட மிஞ்சப் போவதில்லையே....
ஆற்றிலோ, ஏரியிலோ, குளத்திலோ, கிணற்றிலோ,
கடலிலோ கரைக்கப்பட்டுவிடுமே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Feb-17, 8:49 pm)
பார்வை : 3344

மேலே