பயத்தை வெல்லுங்கள்

இளம் வயதிலேயே நல்லறிவின் ஆளுமை பெற்ற ஒருவர் மலைப்பாதையில் நடந்துச் சென்று கொண்டிருந்தார்....
அவ்வாறு சென்று கொண்டிருக்கையில் வழியில் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டிய நிலை வந்தது...
பாலத்தின் ஒரு முனையில் அந்த இளைஞர் நுழைந்தபோது, அப்பாலத்தில் மறுமுனையில் ஒரு புலி வந்துக் கொண்டிருந்தது...

அது மிகவும் குறுகிய பாலமாக இருந்ததால் அதன் வழியாக ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க இயலும்...
அந்த இளைஞரின்
ஏதிரே புலி வந்துக் கொண்டிருக்கிறது..
புலிக்கு வழிவிட்டு பின்வாங்கினால் அந்த புலி இளைஞரை நிச்சயமாக வேட்டையாடிவிடும்...
அந்நிலையில் அந்த இளைஞர் என்ன செய்தாரென்றால்,
தனது நெஞ்சை நிமிர்த்தி, தைரியமாக,
பயத்தை அறவே துறந்து புலியை நோக்கி பாலத்தில் முன்னேறிச் சென்றார்...
தன்னை நோக்கி வரும் இளைஞரின் கம்பீரம் கண்டு, பயந்த புலி பின்வாங்கியது...
ஒருகட்டத்தில் தப்பித்தால் போதுமென ஓடிவிட்டது...

இதைப் போன்றே வாழ்வின் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சாமல் எதிர்கொள்ள வேண்டும்...
பயந்தவன் என்றுமே வெற்றியை பெறுவதில்லை என்பதைவிட, அவனால் ஒரு நாளும் சந்தோஷமாக வாழ முடியாதென்பதே உண்மை....
எனவே, உங்களுடைய பயத்தை வெற்றி கொள்ளுங்கள்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Feb-17, 9:26 pm)
பார்வை : 491

மேலே