உன்னை என்னை

உன்னை என்னை
அழிக்கனு மென்றால்
உலகம் முதலில்
அழிந்து போகனும்!

நீயும் நானும்
வெறுக்கனு மென்றால்
நீரை மீன்கள்
வெறுத்துப் போகனும்!

நீயும் நானும்
சிரிக்கனு மென்றால்
நிஜமும் கனவும்
சந்தித்துப் போகனும்!

உன்னில் என்னை
கலக்கனு மென்றால்
உயிரில் காதல்
கலந்து போகனும்!

உன்னை என்னை
உருக்கனு மென்றால்
உலகின் பூக்கள்
உருகிப் போகனும்!

உன்னால் என்னை
மறக்கனு மென்றால்
உலகம் சுழல்வதை
மறந்து போகனும்!

உன்னை என்னை
பிரிக்கனு மென்றால்
உயிரும் உடலும்
பிரிந்து போகனும்!

எழுதியவர் : (17-Feb-17, 9:51 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : unnai ennai
பார்வை : 89

மேலே