அடித்திடடி போர்ப் பறையை

பறையென்பது சங்கத்தமிழில்
பயின்று வந்த பண்பாட்டு இசையென்று
சாதிவெறித் தமிழர்களின் காதுகளில்
உறைத்துட ஓங்கி அடித்திடடி பறையை...

பறையென்று கண்டவுடன்
பதிவுகளைப் (முகநூலில்) படிக்காமல் ஓடிடும்
மக்களின் காதுகளும் கால்களும்
களிநடனமாட கொட்டிடடி தோல் பறையை...

கொண்டவனைக் கொன்றவர்கள்
குலை நடுங்கிச் செத்திடவும்
சாதியத்தின் சங்கினை அறுத்தெறிய
கொட்டிடடி தமிழ்ப் பறையை...

சாதியத்தின் முகத்தில் கரிப்பூசிய
நீயன்றோ புதுமைப் பெண்!!!!
தமிழ்ப்பெண்கள் சாதியத்தின் பிடியினின்று
விட்டுவிலக அடித்திடடி போர்ப்பறையை...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (17-Feb-17, 11:34 pm)
பார்வை : 95

மேலே