பருவத்தில் வரும் காதல் கிறுக்கு

உங்கள் நண்பன் பிரகாஷின் 118ம் படைப்பு.......

இது பருவத்தில் வரும்
காதல் கிறுக்கு......


ஒரு அழகான தேவதை
வீதி உலாவில கண்டேன்...

கண்ட நொடியில நானும்
காதல் கொண்டேன்.....

நிலவின் அழகு
முகத்தில் தெரியும்.....

ரெட்டை ஜடையில்
மல்லிகை மலரும்.....

அழகு நடையில்
இந்திரன் படைப்பு....

கள்ளச் சிரிப்பில்
காதல்சிறையில் அடைப்பு....


அவளின்
திருத்தப்படாத புருவம்..
என்ன
திரும்பி பார்க்க தான் வைக்கும்......

அவளின்
மை பூசும் கண்ணு..
என் கண்ண கட்டி தான்
இழுக்கும்.....

அவளின்
சிவப்பு சாய உதடு..
என் உசுர மயக்கி தான்
எடுக்கும்......

அவளின்
குழி விழுந்த கன்னம்..
என் வயச கடத்தி தான்
கொளுத்தும்.....

அந்த தேவதை போல
யாரும் இல்ல......

இந்த புத்திக்குள்ள
கிறுக்கு மெல்ல.....

இரவு முழுவதும்
கனவில் தள்ள.....

விடிந்த பின்னே
காதலை சொல்ல....

கவிதை ஒன்று
தோன்ற வில்லை....

அவள வர்ணிக்காம
இருக்க முடியல....

அவளா பார்த்த உடனே
வந்த காதல்......
என் மனதில்
ஒருவித மோதல்......

எனக்கு கிடைக்குமா!
இந்த புதையல்.......
காத்துக் கிடப்பேன்!
ஒரு யுக விடியல்......

எழுதியவர் : பிரகாஷ்.வ (18-Feb-17, 6:52 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 465

மேலே