விவசாயியும் விவசாயமும்

நாம் அறுசுவை உணவுண்ண
அரை வயிற்றுக் கஞ்சி குடிப்பான்
விவசாயி
ஐபோனோ ஆண்டிராய்டோ
செயலியைக் கொண்டு செய்ய முடியாது விவசாயத்தை
சேற்றினில் கால் பதித்து விவசாயி நாற்று நட்டால் தான்
நாம் சோற்றினில் கை வைக்க முடியும்
பாடுபட்டு நிலத்தை பண்படுத்தி
வானம் பார்த்த மண்ணை நம்பி
நெல் விதைத்து
இரவோடும் பகலோடும் நீர்
இரைத்து காத்திருப்பான்
நெல் வளர
மழை தப்பிப் போனாலோ
பயிர் வாடி நின்றாலோ
அவன் உயிர் நாடி நின்றுப் போகும்
இவ்வளவும் செய்த பிறகு
அறுவடையும் முடிந்த பிறகு
அவனுக்கென்று ஏதுமில்லை
கொடுப்பதெல்லாம் நமக்குத் தான்
விவசாயம் அவனுக்கு தொழிலல்ல
அதுவே அவன் குல தெய்வம்
விவசாயி இல்லை என்றால்
விவசாயம் இல்லை
விவசாயம் இல்லை என்றால் ??

எழுதியவர் : ரா.விவேக் ஆனந்த் (18-Feb-17, 12:36 pm)
சேர்த்தது : ரா விவேக் ஆனந்த்
பார்வை : 1083

மேலே