நண்பர்களின் கேளிக்கையே ,நெஞ்சுக்கு ஆறுதல்

Situation:
ப்ரொமோஷன் வராத கவலையில் நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கும் நண்பனை பார்த்து அவன் நண்பர்கள் கேளிக்கையுடன் ஆறுதல் சொல்வதுபோல் அமைந்த பாடல்.

பல்லவி

கோரஸ்:
நண்பர்கள்:

It இது But ஆனால் What என்ன?
இடிந்து போயிருப்பதால் பலன் என்ன?

நண்பன்: அனுபல்லவி

ப்ரொமோஷன் போயிடிச்சாம் பிள்ளையாண்டனுக்கு
எமோஷன் ஆயிடிச்சாம் ஹார்ட் அட்டாக்குக்கு

சரணம்

பள்ளிக்கூடம் பாரும்
படிச்சவாளக் கேளும்
நோக்கு என்ன தெரியும்
நோக்காம கேளும்
உலகம் பள்ளிக்கூடம்
ஒசந்தவா சொல்லக் கூடும்
ஒமக்கு வேண்டியத எடும்
ஒண்ணுமில்லைனா விடும்
ஓய் ஒண்ணுமில்லைனா விடும் (ப்ரொமோஷன்)

கோரஸ்: நண்பர்கள்:

மாங்கா சைஸ் ஹார்ட்டுக்கு
தேங்காய் சைஸ் சோப்பிட்டு
அமுக்கி எடுக்கும் முயற்சிகெட்டு
வழுக்கி விழுந்தான் மெனக்கட்டு

நண்பன்:

உண்மையாய் உழைச்சவனாக்கும்
உள்ளதை வெளுத்துக்கேளும்
உமக்கு போட்டது உம்மைச்சேரும்
தட்டிப்பரிப்பாரை தடுக்க்ப்பாரும்
எல்லாச்செயலும் அவன் பார்வையில்
எல்லாப்புகழும் அவன் கைய்யில்
பாவம் பண்ணினவாளை அவன் பாத்துப்பான்
பாடாய் படித்திஎடுப்பான் பொருத்துபாரும்
ஓய் பாடாய் படித்திஎடுப்பான் பொருத்துபாரும் (ப்ரொமோஷன்)

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (18-Feb-17, 1:48 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 111

மேலே