ஆழமான காதல்

(Situation: எதிர்புகளை தகர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட பின்,
காதலனுக்கு ஆண்மை குறைவு கருதி, காதலியிடம் வேறு திருமணம்
செய்துகொள்ள சொல்ல, காதலி பதில் கூறுவதுபோல் அமைந்த பாடல்.)

போறானே புளுகனிப்பய,
புதச்சி வச்ச நெஞ்சமறச்சி
பட்டுன்னு சொல்லிப்புட்டான்
பிடிக்லன்னு உதட்டளவில்...

பொம்பளஎன்ன கிள்ளுக்கீரையா
பொசுக்குன்னு தூக்கிஎறிய,
வாயால வசபாடி, முச்சந்தி மண்ணத்தூவி,
அழுதுபுரண்டு, ஆர்ப்பாட்டம் செஞ்சு
நாலுவார்த்த நறுக்குன்னு கேட்டு
நாசமாபோன்னு விட்டுவிட (பொம்பள)

நம்பவச்சு கழுத்தறுக்கல
நடுவுல நீயும் மறக்கவில்ல
நாலு காசு வந்த பின்னும்
நாடி வந்த நீதி மானே!

சாதிபேயி குறுக்கிட்ட பின்னும்
சடன் பிரேக்கு போட மறுத்து
சங்கடம் கொடுக்கும் சாதியை விட்டு
சம்புருதாயம் பேசும் மீதியை விட்டு
உலகத்த நினச்சிக்கிட்டு,
உறவுகள விட்டுப்புட்டு
நெஞ்சாங்குட்டைய குழப்பி விட்டு
நேச வலைய வீசிவிட்டு
மஞ்சத்தாலிய கட்டிப்புட்டு
தனிக்குடித்தனம் வந்த சிங்கமே
வேறுகல்யாணம் செஞ்சுக்க சொல்வது அசிங்கமே! (போறானே)

விஞ்ஞான வளர்ச்சியிலே, வியாதிஎல்லாம் பஞ்சாய் பறக்கையிலே
விதியின்னு விழுந்து கெடக்க,
புயலுல சாஞ்ச மரமில்ல நாம,
காதலில சாஞ்ச மனுஷஜென்மம்
மறுபடியும் எழுந்து நின்னு
மருத்துவத்த சரியா செஞ்சி
மீண்டும் ஒரு சாதன செய்வோம் (போறானே)

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (18-Feb-17, 9:28 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 168

மேலே