நான் எழுதிய கவிதையின் கடைசி பத்தியை நீயும் எழுதுவாய்

நீயே கடவுள் என்றாய்...
பின்
இல்லையில்லை கல் என்றதும்
அதே ஈர உதடுகள்தான்...
ஒருமுறை
நீ கடவுள் துகள் ஆகவே
கண் கலங்க வைக்கிறாய்
என்றாய்...
நீ வெறும் பாறை
கடவுளென்பது உன் மாயத் தோற்றம்
என்று சொல்லி
என் விரலை நீ வெடுக்கென விட்ட
ஞாபகம் ஒருமுறை...
நெடுந்தூரப் பயணமொன்றில்
கடவுளின் மொத்தமென கிடைத்தாய்
என நீ சொன்னது இக்கவிதையின்
நான் எழுதா முதல் பத்தி...
அதை நீ மீண்டும் யாரிடமோ
சொல்கையில் கடந்து விடத்
தீர்மானித்திருந்தது
என் கல்லின் கடவுள்தனம்...
அதே சமயம் கடக்க முடியாமல்
கல்லாகவே கிடந்தது
உன் கடவுளின் கள்ளத்தனம்...!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Feb-17, 3:52 pm)
பார்வை : 150

மேலே