விந்தைதரும் இயற்கை

எட்டிக்காய் விடத்தில்
எட்டி நடக்கும் முன்
மூச்சை அடக்கிவிடும்
உக்கிர நச்சுண்டு
ஆனாலும் சித்தர்கள்
அந்த விடத்தில்
உயிர்காக்கும் விந்தை
மருந்தும் கண்டார்


நாகத்தின் விடத்தை
அறியாதாரும் உண்டோ
இவ் வையகத்தில்
ஆயின் அந்த
கொடிய நாகத்தின்
விடமே அந்த
விடத்தை போக்கிவிடும்
மாமருந்து கடிபட்டோர்க்கு;
இன்னும் சொல்வேன்
மாமருந்தாம் அது
ராஜபிளவையாம் நோயிற்கும்

இன்சுவைப் பண்டங்கள்
இனிய பழங்கள் எதனை எத்தனையோ
இனிப்பென்றும் அமுதுமென்றும்
இவற்றை அளவில்லாது உண்டால்
இவைமுதமும் நஞ்சாய்
மாறிவிடுமே

இப்படியே இயற்கையில்
நஞ்சில் அமுதமும்
அமுதத்தில் நஞ்சும்
இரண்டற கலந்திருந்தால்
விந்தையிலும் விந்தையே

நஞ்சின் வீரியம்
அறிந்திடல் வேண்டும்
அது போல அமுதின்
தன்மையும் அறிதல் வேண்டும்

வாழ்விலும் இனிப்பும் கசப்பும்
அமுதும், விடமும் போல
இதை உணர்த்தவல்லவோ
இயற்கை நச்சும்
அமுதம் என
எத்தனையோ சிருட்டிகள்
நம் கண் முன்னே வைத்து
வேடிக்கைப் பார்க்கிறது

என்னே இந்த விந்தைதரும்
இயற்க்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Feb-17, 2:31 pm)
பார்வை : 356

மேலே