அவளின் ஏக்கம்

​கண்ணோரத்தில்
உன் நினைவேடு தான்
துளி விழுகின்றது
காதலில் வழிகின்றது

உன்னை பார்த்திடிடும் போது
மனம் அலைபாயுது ​​
மொழி குலைகின்றது
தேகம் குளிர்கின்றது

நீ சிரிக்கும் போது
இயற்கை இசை பாடுது
மோகம் கவி பேசுது

உன் பாதம் பதிந்த மணலில்
என் தோட்டத்தில் மாளிகை செய்து
யாழினை இசைத்து
உமக்காக காத்துருப்பேன்

அத்தனிமையின் இருளில்
கள்வனாய் என்னுள் நுழைந்து
சந்தோசம் பல ஆயிரம் பூக்க செய்து
நாணத்தில் மனதை சிலிர்க்க வைப்பாயா

அந்நொடியில் நீ தரும் முத்தத்தில்
எந்தன் பெண்மையும் குடை சாய்ந்திடுமே
நெஞ்சிலே புயல் வீசிடுமே

என் காதல் ஜீவன் பெற
என்னோடு விரல் சேர்த்திடுவாயா
சேர்த்து -கடிகாரம் பாராமல் பேசிடுவாயா
பேசி- வெண்ணிலாவுக்கு கூட்டி சொல்வாயா
சென்று- நுனி மூக்கில் கொஞ்சி
இறகாய் என்னை மிதக்க செய்வாயா
என் உயிரே......

எழுதியவர் : கண்மணி (20-Feb-17, 7:44 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : avalin aekkam
பார்வை : 1686

மேலே