ஹைக்கூ

இயற்கை உபாதையை அடக்க
முடியாத இரு ஜீவன்களின் இன்பத்தில் பிறந்தது ஒரு துன்பம்
--- அனாதை குழந்தை

தன் வயிற்று பசியை போக்க
அடுத்தவனின் உடல்பசிக்கு
கனத்த இதயத்தோடு உணவாகுபவள்...
--- விலைமாது

ஆயிரம் அறிவுகளை உள்ளடக்கி
தன்னிடம் பழகுபவரை எல்லாம்
மேதையாக்கும் ஒரு உன்னத நண்பன்
--- புத்தகம்

தான் செய்யும் தவறுகளை
திருத்திக்கொண்டு வாழ்க்கையில்
முன்னேறாமல் இதன் மீது பழியைப்போடுவார்கள் சிலர்...
---விதி

எழுதியவர் : செல்வமுத்து.M (21-Feb-17, 9:09 am)
Tanglish : haikkoo
பார்வை : 185

மேலே