நான்

பிடிவாதத்தின் அம்சம் நான்;
அப்பாவின் தேவதை நான்;
அம்மாவின் அடங்காபிடாரி நான்;
தம்பியின் சக பயில்வான் நான்;
அண்ணனுக்கு சகுனி நான்;
குடும்பத்தின் இராணி நான்;
அதிகாரத்தின் மையம் நான்;
கணக்கு வழக்கின் கொத்து சாவி நான்;
கேள்வி கேட்கும் காவல் நான்;
சேட்டையின் மொத்தம் நான்;
உறவுகளின் ப்ரியம் நான்;
நான்; நான்; நான்; நான்..
திடிரென்று ஒர் குரல்...
சுதாரித்தப்படி..
"இதோ வந்துட்டேன் அத்தே"..
மறந்துவிட்டேன்..
தற்போது மருமகள் நான்!

எழுதியவர் : கவிழகி செல்வி (21-Feb-17, 4:28 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 230

மேலே