காதல்

பட்டுடையில் வந்த பருவ சிட்டே
கட்டுடல் உருவம் கொண்ட பவளத்திட்டே !
உன்னை கண்ட முதல் நொடியில்
காதல் பூத்தது என் வாழ்க்கை செடியில்
அனுதினம் உந்தன் மடியில்
வேண்டும் எந்தன் விடியல் ..
பிறை நெற்றியால் என்னை
சிறை வைத்தாய்
பார்வையால் பனிபோல் உணர்வுகளை
உறைய வைத்தாய் ..
கண்ணசைவில்
கட்டுமரம் என்ன கவுத்துப்புட்ட
கட்டுக்கடங்கா கற்பனை மூட்டையை அவுத்து விட்ட
நோக்கு வர்மத்தால்
தேக்குமரம் என்ன
பாக்குமரம் போல வளைச்சுப்புட்ட
உதட்டு சாயம் பூசி வந்து
அசுர வேகத்தில் உசுர எடுக்குற
அசர வைக்கும் அழகால்
உலக போர் தொடுக்குற ..
அயல் நாட்டு கயலே
அசைந்தாடும் வயலே
அழகு புயலே
திருமணம்முடித்து ..
இருவரும் மனம் படித்து
இருவிரல் பிடித்து
இச்சைக்கு பச்சை கொடிக்காட்டி
துவங்கலாம் வா கட்டில் போட்டி ...
கூச்சமின்றி நீயும்
கூச்சலின்றி நானும்
காமத்தீயை மூட்டி ..
இதழோடு இதழ் பூட்டி
இன்பத்தேனை ஊட்டி..
வாழ்வின் பொருள் தேட
அலைபாயுது எந்தன் மனம் ....

எழுதியவர் : நாஞ்சில் ஆலன் (21-Feb-17, 6:42 pm)
சேர்த்தது : nanjilallen
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே