குடும்பத் தலைவி

அம்மா மல்லிகைப்பூ மாதிரி இருக்கட்டும் இட்லி!
மகன்
சட்னியில் ஒரு மிளகாய் குறைச்சிட்டு இரண்டு
வரமிளகாய் தாளிச்சி கொட்டிடு!
கணவர்
லன்ச்சுக்கு வத்தக்கொழம்பு வச்சிருங்கம்மா!
மகள்
மறக்காம நாலு அப்பளம் பொரிச்சி வச்சிருங்க அத்தை!
மருமகள்
பொரியலுக்கு தேங்காயை துருவி போடுங்க, மிக்ஸியில்
அரச்சி போடாதீங்க, உங்க மாப்பிள்ளைக்கு பிடிக்கல!
மகள் மீண்டும்.
பாட்டி கல்கண்டு சாதம்!
மழலையில் பேரன்
நாளெல்லாம் சமையல்க்கட்டில் வெந்து வீடே கதி என்று கிடக்கும் எனக்கும் பிடித்தமானதை கேட்கத்தான் ஆசை!
ஆனால், யாரிடம்?
அவர்கள் வெளியில் வேலைக்குச் செல்பவர்கள்,
நான்தான் வீட்டில் சும்மா இருக்கும் குடும்பத் தலைவியாச்சே!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (21-Feb-17, 9:32 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 231

மேலே