காதல் தவம் புரியும் காதலன்

என்னவளே என்னவளே
உன் விழிகளைக்காண
என் விழிகள் கொண்டு தேடினேன்
உன் விழிகளைக் கண்டேன் இல்லேன்
வர்ண ஜாலம் கொண்ட
வான வில்லைக் கண்டேன் அங்கு
இது என்ன ஜாலம் என்று
நான் நினைக்கையிலேயே
அந்த வானவில் மறைந்து
உந்தன் கயல் விழிகள் தெரிந்தன
இல்லை களி நடனம் புரிந்தன

சித்திரப் பாவையே உந்தன்
செம்பருத்தி உதரங்கள்
சற்றே அலர்ந்திட உந்தன்
சிரிப்பு வந்து உதிர்ந்தது
இல்லை வானம் பெய்தது
முத்துத் திவலைகளை -அதை
அள்ளிப் பார்க்க நினைக்கையிலேi
கண்ணே உந்தன் சிரிக்கும்
வண்ண வட்ட முகத்தைக் கண்டேன்


உன்னை முழுவதுமாய் பார்க்க நினனைத்தேன்
நாணத்தின் உச்சத்தில் நீ
கொடி மின்னல் போல் தோன்றி
என் முன்னே வந்தும் வாராதது போல்
உந்தன் வீட்டு முற்றத்தில்
மறைந்து கொண்டாயே
இது நியாயமா பைங்கிளியே
என் அதை மகளே ரத்தினமே


கோல மயில்போல் ஆடி ஆடி
என்முன்னே வந்திடுவாயே
உந்தன் தரிசனத்திற்காய்
காத்து நிற்பேன் உன் வீட்டு
வாசல் படியிலேயே ஒத்தக்
காலில் நின்று பகீரதன் போல்
தவம் செய்து இது எந்தன்
காதல் தவம் ஏற்றுக் கொள்வாய்
என் கண்முன்னே வந்து
நின்றிடுவாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Feb-17, 7:06 pm)
பார்வை : 299

மேலே