அம்மா

அம்மா

உன்னுள் நான் இருக்க
பார்த்து பார்த்து என்னை
பக்குவமாய்……
பெற்றெடுத்-தாய்……………!!

தவறி விழுந்து நான்
அழுக
காரணமின்றி நீ அழு-தாய்…………….!!

எனக்கு உணவூட்ட
நீயும் குழந்தை ஆனாய்……….!!

அப்பா என்னை அதட்ட
அவரை நீ மிரட்டினாய்……!!
தாய் மட்டும் அல்ல
முதல் தோழியும் நீதான்………!!


அன்பின் உண்மையும்
காதலின் அர்தமும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்………!!

அன்று நீ அடித்த
அடிகளின் காரணம்
இன்று புரிந்து கொண்டேன்………!!

என்னை சுமந்த உன்னை
நான் சுமக்க விரும்ப வில்லை………….
என்னை நான்கு பேர் சுமக்கும் வரை
என்னுடன் இரு
அது போதும்…………………
_ அன்பு மகன் _
அதார் உதார் விக்கி

எழுதியவர் : அதார் உதார் விக்கி (22-Feb-17, 9:54 pm)
Tanglish : amma
பார்வை : 757

மேலே