காலம் எதிர்காலம்

பெற்றோர்கள்
சொன்ன வார்த்தைகளை
கேட்க அன்று எட்டி கசப்பு
படித்து படித்து
சொன்னார்களே
அவைகள் அன்று
வெறுப்பை கூட்டின...

எதை இழந்தாலும்
பெற்றுவிடலாம்
காலத்தை பெறமுடியாது
காலம் பொன் போன்றது
என்றெல்லாம் சொன்னார்களே
கேட்டதா இந்த பாழும் மனசு...

சரிவர படித்திருந்தால்
காலத்தை பயன்
படுத்தியிருந்தால் இன்று
ஏன் இத்தனை துன்பம்
ஏன் இத்தனை பற்றாக்குறை
ஏன் இத்தனை வலிகள்
ஏன் இத்தனை கவலைகள்...

இதை தலை எழுத்து
என்று சமாதானம் ஆவது
மூடத்தனம்
நம் தலை எழுத்தை
எழதிக்கொள்வது
நாம் தானே தவிர
ஆண்டவன் அல்ல...

புரிந்தது விட்டதா
வீனடித்த காலம்
இப்போ எப்படி
வேட்டு வைத்ததென்று
காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்வது தான்
புத்திசாலிக்கு அழகு...

இளமையில் கற்றுக்கொள்
என்று ஏன் சொன்னார்கள்
முன்னோற்கள் எல்லாம்
அவர்களின் அனுபவம்
பக்குவம் பாடம்
அதை ஏற்க மறுத்தால்
வாழ்க்கையில் வேதனைதான்
மிஞ்சும்...

இளமையில் இன்பம்
முதுமையில் துன்பம்
பெற்றோரின் அறிவுரைகளை
ஏற்று நடந்தால் காலத்தின்
கைகளில் நாம் இல்லாமல்
நம் கைகளில் காலமிருக்கும்...

இன்று தினமும் ஊரைவிட்டு
ஊர்வந்து உழைத்து தூக்கத்தை
கூட தவனைமுறையில் தூங்கும்
போது வலிக்கிறது என் இதயம்...

வாரம் பத்து நாள் ஆகிறது குழந்தைகளோடு
கொஞ்சிபேசி விளையாட
பிஞ்சு முகங்கள் நான் வரும்போதும்
உறக்கம் போகும் போதும் உறக்கம்
என் மேல் கடவுளுக்கும் இரக்கமில்லை...

அன்று என் தந்தை சொன்னது
இன்று சொன்னது போல்
என் காதுகளில் இன்னும்
ஒலித்து கொண்டிருக்கிறது
அந்த வாக்கியங்கள்...
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்ற அந்த ஔவையின் வரிகள்...

வாழ்வது ஒருமுறை அதை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
போல் வாழ்ந்தால் எல்லோருக்குமே
நன்மை பயக்கும்....

எழுதியவர் : செல்வமுத்து.M (23-Feb-17, 10:32 am)
பார்வை : 318

மேலே