பெண்ணே பெண்ணாய்

பெண் பார்க்கும் படலம். . .

மாப்பிள்ளை
புகைப்படத்தை
மேசை மீது வைத்து விட்டு
பெண்ணே
பார்த்து சொல்லு. . .
நாளை காலை
வரன் வருவார் . .
நேரிலும் பார்த்து விடு ...
அப்பாவின்
அனுமதியில்
என்
ஆயிரம் கனவுகள் மெய்த்திடுமா?

இதோ விடிந்தது
அவனும் வந்துவிட்டான். .
பெண்ணே
பெண்ணாகிய வரிகள். . .

கண்ணாடி
கண்முன்னே
சுண்டு விரல்
மைதொடுத்து
நான் ஏவும்
விழிகளுக்கு
மீன் போல வேடமிட்டு
உனை விழுங்கும் ஒத்திகையை
என் காதோடு
ரகசியமாய் ...
என் விழியுடனே
கூறிவிட்டு
ஏனோ
முரசு கொட்டி
தாளமிட்டு
தொங்கட்டனாய் ஆடுதடா. .

பெண்பார்க்கும்
படலமென்று
கூட்டுக்கூட்டாய்
தலைகள் தெரிய . . .
என்
கால் கட்டை விரல்
திசை நோக்கி
பால் திருடும் பூனைப்போல்
மெது மெதுவாய்
உன் விழியில்
நானும் வந்து மாட்டிக்கொள்ள. . .
ஐயோ! குதிக்குதடா
உன் மார்பில் முகம் புதைக்க. . . .

வெட்கத்தின்
வீதியிலே
உன்னை மட்டும்
நான் காண
சத்தமில்லா பார்வையை
தூதனுப்பி
விழியசைத்து முத்தம் தந்தேன் . .
சிறகடித்த வயதும் கூட
முட்டையில் பொறிந்த
கோழிக்குஞ்சைப்போல்
உனைக்கண்ட நாள் முதலே
அடைக்கலம் தான் தேடுதடா. . .

உனை கண்ட
நாள் முதலே
தாவணியும் தயக்கம் கொள்ளும் ....
விடைபெற்று வியந்து
பின்னும்
புடவையோடு முழுமைப்பெறும்
ஒரு பெண்ணைப்போல் . . .
நானும்
முழுப்பெண்ஆகிப் போனேன்னே...


காதலிலே
பலவகையோ?
மேகக்கூட்டங்கள் கலைந்தபின்னும்
அப்பட்டமாய் வெளிப்படும்
சந்திரனாய்
நீ காத்திருக்க. .
ஊரெல்லாம்
ரசித்தனவே
இந்த பேதை
மட்டும் தயங்கி நின்றேன் . ..
பிழையோ
பயமோ
எதுவென்று தெரியாமல்
மதில் மேல் பூனைப்போல்
சிந்தையிலே
செயல் விளக்கம். . .
இது தான்
வெட்கமென்று
அப்போது தெரியவில்லை ..
இருந்தும்
தேநீர் தட்டினிலே
தாரளமாய் அதை பரப்பி
தயக்கத்துடன் விடைபெற்று சென்றேனே. . .

✍🏼மருதுபாண்டியன்.க

எழுதியவர் : மருதுபாண்டியன். க (23-Feb-17, 10:45 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : penne pennaay
பார்வை : 448

மேலே