தமிழுக்கு ஓர் பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாயிரம் பல்லாண்டு
வாழ்ந்திடல் வேண்டும் எம் தாயே
தென்னவர்த் தொன்மொழியே
அமுதாம் தமிழே எங்கள் உயிரே
கல்தோன்றி மண்தோன்றாமுன்
தோன்றிய தமிழ்க்குடிமக்கள்
தாய் மொழியே தமிழ்த் தாயே
இயல்,இசை,நாடகம் என்று
மூன்று முகங்கள் உனக்குண்டு தாயே
தொல்காப்பியமும் நன்னூலும்
உனக்கமைந்த இலக்கண
அணிகலன்கள் தாயே
தமிழர்தனிக் கடவுள் குமரன்
ஓதித்தந்த தனிப்பெருங் தமிழ் நீ
அந்த குடமுனி அகிகத்தியனே
உந்தன் வளர்ப்புத் தந்தை அம்மா

உன்னுடன் வந்த தொன்மொழிகள்
பலவுண்டு அவையெல்லாம்
இன்று பெரு வழக்கில் இல்லை
நீயோ தாயே கன்னித்தமிழாய்
பிறந்து பொன்னித்தமிழாய் வளர்ந்து
குமரித்த தாயாய் தென் முனையில்
இருந்து எம்மை காக்கின்றாய்
எங்கள் காவல் தெய்வமுமாய் அமைந்தாய்

எங்கள் தமிழ்த்தாயே நீ
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு வாழ்கவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Feb-17, 2:56 pm)
பார்வை : 363

மேலே