காதலின் அடுத்த கட்டம்

நான் காதலிக்கும் பெண்ணின் பெயர் பவித்ரா. என் பெயர் சுரேஷ். நாங்கள் இரண்டு வருடங்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

ஒரு நாள் மாலையில் நானும் அவளும் பூங்காவிற்கு சென்றோம். அப்போது அவள் என்னிடம் "நம் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்று கூறினால்.அதற்கு நான் "நீ கூறுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றேன். நம் காதலை நம் பெற்றோர்களிடம் கூறி சம்மதம் வாங்க வேண்டும் என்றால். அதற்கு நான் "சரி நான் என் வீட்டில் இன்றே போய் பேசுகிறேன், நீயும் உன் வீட்டில் பேசு" என்று கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

ஆண் பிள்ளை என்றால் அம்மாவின் செல்லம், பெண் பிள்ளை என்றால் அப்பாவின் செல்லம் என்பது காலங்காலமாக இருந்து வருகிறது. எனக்கும் அம்மா தான் செல்லம் என்பதால் பவித்ராவை காதலிப்பதை பற்றி முதலில் என் அம்மாவிடம் கூறலாம் என்று நினைத்தேன். அதுவும் இன்றே கூறிவிடலாம் என்று முடிவு செய்து வீட்டிற்கு சென்றேன்.

வீட்டினுள் என் அம்மா சமயலறையில் ஏதோ வேலையில் இருந்தார்கள். நான் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தேன் அதில் சன் லைப் சேனல்-லில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. என்ன ஒரு அருமையான பாடல்.

அந்த பாடலை வைத்துவிட்டு பவித்ராவை பற்றி அம்மாவிடம் கூற சமயலறைக்கு சென்றேன். அவளை பற்றி கூறியதும் அம்மா கண்டிப்பாக அதிர்ச்சியாக மாட்டார்கள் என்று ஏனென்றால் பல முறை பவித்ராவுடன் மெசேஜ் செய்யும் பொழுது சிரித்திருக்கிறேன், கைப்பேசியில் அவளிடமிருந்து அழைப்பு வந்தால் தனியாக போய் தான் பேசுவேன் இதையெல்லாம் என் அம்மா கண்டிப்பாக கவனித்திருப்பார்கள் என் மீது சின்ன சந்தேகம் வந்திருக்கும். ஆதலால் நான் கூற போகும் விஷயம் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்காது.

பவித்ராவை பற்றி அம்மாவிடம் கூறினேன். கூறி முடித்ததும் என்னை முறைத்து பார்த்தார்கள். குழம்பின் கரண்டியை எடுத்து என்னை அடித்து விடுவார்களா இல்லையெனில் அடுப்பில் இருக்கும் எண்ணெய்யை எடுத்து ஊற்றி விடுவார்களா என்று பயந்தேன் ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அவர்களிடம் பவித்ராவின் புகைப்படத்தை காண்பித்தேன். அம்மா என் மீது கோபமாகவே இருந்தார்கள் என்னிடம் எதுவும் பேசவில்லை.

பவித்ராவும் அவள் தந்தையிடம் என்னை பற்றி பேசுவதாக கூறினால். அவளின் தந்தை நாளை என்னை நேரில் சந்திக்க விரும்புவதாக என்னிடம் கைப்பேசியில் கூறினால்.

மறுநாள் அவள் தந்தையை நேரில் சந்தித்தேன் என்னிடம் கொஞ்சம் கோபமாக பேசினார். அவர் பெண்ணை காதலித்ததற்காக என்னை புரட்டி போட்டு அடிக்கவில்லை அது ஒன்று தான் குறை மற்றப்படி என்னை திட்டித்தீர்த்து விட்டார்.

எங்கள் காதலை எங்கள் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்று வருத்தப்பட்டோம். ஆனால் பவித்ராவின் தந்தை எங்களின் காதலை ஏற்றுக்கொண்டார். மறுநாளே திடீரென்று என் அம்மா என்னிடம் நாளை பவித்ரா வை வீட்டிற்கு அழைத்து வர
கூறினார்கள். எங்களின் காதல் வெற்றியடைந்தது.

எழுதியவர் : சரவணன் (23-Feb-17, 4:34 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 538

மேலே