வேலை கிடைச்சுடும்

நண்பன் 1 : மச்சி , நீ அன்னைக்கு எழுதுன பரீட்சைக்கு இன்னைக்கு தானே
ரிசல்ட்டு . நீ கூட நல்ல எழுதியிருக்கேன் , வேலை
கிடைச்சுடும்ன்னு சொன்னியே . ஆமா , அது என்ன பரீட்சை ?

நண்பன் 2 : அதுவா டா ! abcd 26 ல தான் ஏதோ நாலு எழுத்து வரும் . ஆனா ,
எந்த ஆடர்ல வரும் னு தெரியல .

நண்பன் 1 : சரி , ரிசல்ட்டு பார்த்துட்டு போன் பண்ணு

( ரிசல்ட் பார்த்த பிறகு , போனில் )

நண்பன் 1 : ரிசல்ட் பாத்துட்டேன்டா


நண்பன் 2 : ரிசல்ட் என்னாச்சி ?


நண்பன் 1 : மாப்பிள , 300 க்கு 350 மார்க் எடுத்துட்டேன் . ஆனா ,
மார்க்குக்கு பக்கத்தில சின்னதா ஒரு
கோடு போட்டுருக்காங்க . அதான் , ஏன்னு தெரியல


நண்பன் 2 : சின்னதா கோடா ......,
அடப்பாவி அது மைனஸ் 350 டா !


நண்பன் 1 : ஓ ! அதான் மெயில் வரலையா !


நண்பன் 2 : உனக்கெல்லாம் கண்டிப்பா வேலை கிடைச்சுடும் ! அசிங்கமா
ஏதாது திட்டறதுக்கு முன்னாடி போன வைச்சிடு

எழுதியவர் : அனுசுயா (23-Feb-17, 8:38 pm)
பார்வை : 846

சிறந்த நகைச்சுவைகள்

மேலே