​விழிப் பயணம்

​வழித்தேடி செல்லும் வானம்பாடி நான்
பழிக்கூறும் சமூகத்தை விலகி வந்தவள் !
குழிதோண்டும் உறவை உதறியவள் நான்
விழிகள் காட்டிடும் பாதையில் பயணம் !

அரும்பியக் காதலால் விரும்பிய அவனிடம்
நெருங்கிப் பழகினேன் உள்ளம் உருகினேன் !
எண்ணப் பரிமாற்றம் எந்நாளும் எந்நேரமும்
வண்ணக் கனவுடன் வானிலேப் பறந்தேன் !

தழுவிட வந்தவனிடம் நழுவிய பழமானேன்
கழுவிட நினைத்தான் கரம்பற்றிக் கேட்டேன் !
தடையேதும் கூறாமல் தவழ்ந்திட விட்டவனிடம்
விலகிட நினையாதே விளையாட்டல்ல என்றேன் !

போராடித் தோற்றேன் வில்லாதி வில்லனிடம்
வாயாடிப் பயனின்றி முடிவாக முடிவெடுத்து
வாழ்வின் விளிம்பை அடைந்திட நினைத்தேன்
துவங்கியது துயரோடு வழியறியா விழிப்பயணம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Feb-17, 3:38 pm)
பார்வை : 327

மேலே