இனியொரு விதி செய்வோம்

அன்று

விடியாத பொழுதுகள் ஒன்றுண்டோ,
பொழியாத மேகங்கள் என்றுண்டோ,
விளையாத நிலங்கள் கண்டதுண்டோ,
பொய்த்த முப்போகம் இங்குண்டோ.

இன்று

வாடிய வெற்றிலையும் சிவந்ததுண்டு,
பரிபோன ஆறுகள் பல உண்டு,
மணலற்ற காவிரியும் இங்குண்டு,
தூக்குக்கயிரான மூக்கனாங்கயிறும் கண்டதுண்டு.

உரிமையை ஓர் ஆயிரத்தில் விற்றாய்
இனி எவன் கேள்வி கேட்பான் என காத்திருக்கிறாய்.
அரசியல் ஓயாமல் கூத்தாடும்,
நாற்காலி சண்டையில் பொல்லாத பேயாடும்.
கேளிக்கை பொரியாகும் தமிழினம்,
இனி வெறும் வாயில் அவல் ஆகும் நம் மானம்.
விவசாயக் கூட்டம் கேட்பாரற்று போகும்,
மீட்டெடுக்க வழித் தேடி அலைய வேண்டும்.

இது ஏமாறும் சமூகம் என முடிவே செய்து விட்டார்,
இனி இலவசத்தில் நம் நாட்டை புரள விட்டார்.

வந்தவரெல்லாம் வாழ்வது இங்கே இனி
இருப்பவரெல்லாம் சாவது எங்கே,
மண்ணை ஒழிக்கும் மத்தியம் இங்கே
இனி எம் நிலம் காக்கும் சத்தியம் எங்கே,
சோற்றுக்கு வழியில்லை இங்கே
அண்டை வீட்டிற்கு ஓசியில் கரிசோறு மின்சாரம் எங்கே.

தண்பெண்டு தன்பிள்ளை படித்ததுண்டு
இவர் உண்மையில் வாழ்கிறார் கண்டதுண்டு,
இந்த தெருவார்க்கு உதவாத சிறிய வீணர்
இதை எண்ணி கவலை கொள்வது இனியும் வீணே.

இருப்பவரெல்லாம் வாழ செய்வோம்
இனி யாரேனும் வந்தால் ஓடச் செய்வோம்.
விவசாய சமூகம் வாழட்டும்,
வாழ்ந்து வஞ்சத்தை சோறிட்டு மாய்கட்டும்.....

நன்றி,
தமிழ் ப்ரியா

எழுதியவர் : தமிழ் ப்ரியா (24-Feb-17, 3:59 pm)
பார்வை : 558

மேலே