ஆச்சி

ஆசையில முத்த செஞ்சு
பாசத்தில கோர்த்தவளே
கண்ணெதிரே நானிருந்தும்
காற்றோடு போனவளே
நீ வரஞ்ச ஓவியம்
கண்ணீர் வடிக்கயில
கண்ணாடி குள்ளிருந்து
அழகாக சிரிக்கிறியே

கண்ணில வெச்ச மையி
செவத்தில மிச்சமிருக்கு
சிங்காரி சீவின முடி
சீப்பில சிக்கியிருக்கு
முற்றத்தில துளசி முல்லைக்கு
தாகம் தீர்க மழையிருக்கு
கூட்டாஞ் சோறு பாசத்தில
ஊட்டி விட நீ இல்லையே

எழுதியவர் : RajeswariSKumar (24-Feb-17, 9:34 pm)
Tanglish : aachi
பார்வை : 304

மேலே