துறவு

கண்களில் கனவுகள்
கனவினில் சலனங்கள்
சலனங்களில் ஏக்கங்கள்
ஏக்கத்தின் தாக்கங்கள்
தாக்கத்தின் கனங்கள்
கனங்களின் ரணங்கள்
ரணங்களுக்கு ஆறுதல்
ஆறதலுக்கோ தேடல்கள்
தேடலே வாழ்க்கை
வாழ்க்கைக்கோ உறவுகள்
உறவுகளின் உணர்வுகள்
உணர்வுகளில் மோகங்கள்
மோகத்தால் வேடங்கள்
வேடத்தால் வேதனை
வேதனையால் போதனை
போதனையோ துறவு...

~ கிருஷ்ணநந்தினி

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (25-Feb-17, 12:22 am)
Tanglish : thuravu
பார்வை : 532

மேலே