இனிக்கும் போது கசக்கும் மெய்கள் ---முஹம்மத் ஸர்பான்

கனவுகள் எல்லாம் நிஜமானால்
வாழும் வாழ்க்கை சலித்து விடும்

நீ இறக்கும் முன் நிஜமாக
ஒருமுறை சிரித்து விடு

கடந்த கால நினைவுகளோடு
நிகழ்காலம் சரணடைகிறது

அறிவின் இலக்கணம் பணிவு
அறிவிலி இலக்கணம் கர்வம்

ஓடும் போது விழுவதும்
விழும் போது எழுவதும்
வாழ்க்கையின் வாடிக்கை

வாழ்க்கை ஒரு போர்க்களம்
நித்தம் நித்தம் போராட்டம்

கடிதங்களை விட
கவிதைகள் மென்மையானவை

ஆயிரம் முறை அழுவதால் தான்
இலட்சியக் கனவுகள் வெல்கிறது

தேசம் கடந்த பறவைகள் கூட்டம்
ஒரு போதும் அகதியாவதில்லை

காத்திருப்பில் கனவு சுமையாகிறது
கடந்து போகும் காலம் பகையாகிறது

கலைத்துறை இல்லாத பள்ளிக்கூடம்
மூடர்களின் உலகுக்கு ஒப்பானது

மனிதனின் நிர்வாணத்தைக் கூட
இணையங்கள் இலாபமாக்குகின்றது

நாகரீக உலகில் பதவிகள் எல்லாம்
சுயநலம் பிடித்த நரிகளை போன்றது

மலடியின் மனதில் கருத்தரிக்கும்
கனவுகள் சேயாய் பிறப்பதில்லை

வாழ்க்கை எனும் போராட்டத்தில்
வாலிபம் தான் தினம் வாள்வெட்டு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (25-Feb-17, 10:32 am)
பார்வை : 142

மேலே