காதல் காத்திரு

வணக்கம்...

முக்கிய செய்திகள்

இளைஞர்களின் போராட்டத்துக்கு பிறகு இளநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. சென்னையில் 30 முதல் 40 க்கு விற்றுவந்த இளநீரின் விலை 20 ஆக குறைந்துள்ளது. சில இடங்களில் 10ரூ க்கு கூட இளநீர் விற்கப்படுகிறது.

இது குறித்து களத்தில் இருக்கும் நம்ம செய்தியாளர் அஞ்சலி கிட்ட கேக்லாம்..

அஞ்சலி.... இளநீர் விலை எப்படி இருக்கு.. விவசாயிகள் என்ன சொல்றாங்க.. விவசாயிகளுக்கு லாபம் இருக்கா.. வாங்கி பருகுகிறவங்க என்ன நினைக்குறாங்க.. சொல்லுங்க..

.... சத்யா நா இப்போ கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு பக்கத்துல இருக்குற ரயில் நிலையத்துல நிக்குறேன். இங்க நிறைய பேர் இளநீர் வாங்கி பருகிறத பாக்க முடியுது. இளைஞர்களின் எழுச்சி ஒரு நல்ல விசயத்த சொல்லிருக்குனே சொல்லலாம், அந்த அளவுக்கு பெரும் மாற்றங்கள தமிழகம் ....

(திடீரென ஒரு கார் வந்து நிற்கிறது..அதிலிருந்து 4 பேர் இறங்கி வராங்க.. அதுல ஒருத்தன் கத்தி வச்சிருக்கான் )

சத்யா: அஞ்சலி... உங்க பின்னாடி எதோ நடக்குற மாரி இருக்கு .. கேமரா மேன் கார்த்தி அத கவர் பண்ணுங்க...

(கார்த்தி கேமராவை அந்த கும்பலின் பக்கம் திருப்புகிறார்.. கும்பலிலிருந்த ஒருவன் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் கேமராவை உடைக்கிறான்..)

கத்தி வைத்திருந்தவன் அஞ்சலியை நோக்கி வர..இதனை சற்றும் எதிர்பாராத அவள் கண்களை மூடிக்கொண்டு அலறுகிறாள்.... ஆஆ......

சிக்... (கத்தி உடம்பில் சொருகும் சத்தம்)

அருகிலிருந்த ரயில்வே காவலர் சிலர் ஓடி வர... ரவுடிகள் காரில் தப்புகின்றனர்...

அலறிக்கொண்டே கீழே பார்க்கிறாள் அஞ்சலி... அவள் மடியில் கதிர் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்...

rewind....

ரவுடி கத்தியைக் கொண்டு அஞ்சலியைக் குத்த வருகின்றான்..

அஞ்சலி பயத்தில் கத்துகிறாள்.. ஆஆ....

எங்கிருந்தோ ஒருவன் அவன் மீது பாய்ந்து அஞ்சலியை காப்பாற்ற முயற்சிக்கிறான்... தவறுதலாக கத்தி கதிரை பதம் பார்த்துவிடுகிறது...

live

வயலின் இசையோடு ... அஞ்சலியின் அழுகுரலும் மங்குகிறது... கதிர்... கதிர்......

காதல்...... காத்திரு....

இதயத்தைக் கொள்ளைக் கொள்ளும் அழகியின் காதல் கதை......

~உதய்~

எழுதியவர் : உதயகுமார் (25-Feb-17, 2:35 pm)
சேர்த்தது : உதயகுமார்
Tanglish : kaadhal kaathiru
பார்வை : 410

மேலே