குப்பை

கண்ணால் பார்த்த குப்பை
காதால் கேட்ட குப்பை
வாயால் பேசின குப்பை
நாக்கால் ருசித்த குப்பை
கையால் செய்த குப்பை
மனதில் கொட்டின குப்பை
குப்பைகள் கொட்டின பட்டியலில்
முதலிடம் ஆணா ? பெண்ணா?

பாலியல் குப்பை
அரசியல் குப்பை
புகயிலை குப்பைை
சாராய குப்பை
கஞ்சா குப்பை
நோயை வளர்தி
உடலே குப்பை
சுற்றிலும் குப்பை
நீரில் குப்பை
காற்றில் குப்பை
நிலத்தில் குப்பை
ஏன்????
எண்ணத்தில் குப்பை

ஆறறிவுடையவன் ஏனோ
இத்தனை குப்பைகளை சேகரிக்கிறான்?
விலங்கினங்களிலிருந்து தன்னை
வித்தியாசபடுத்த
குப்பைகள் சேகரிப்பது
தேவையா?????

சிறிதேனும் சுத்தப்படுத்தட்டும்
என் கவிதை என் பேனா........

எழுதியவர் : RajeswariSKumar (25-Feb-17, 3:12 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : KUPPAI
பார்வை : 160

மேலே