காதல் சொல்ல வந்தேன்

காதல் சொல்ல வந்தேன்

காதல் சொல்ல கவிதையாய்
வந்திருக்கிறேன் உன்
இதயத்தில் ஓர் பக்கம் கொடு

காதல் சொல்ல காட்சியாய்
வந்திருக்கிறேன் உன்
விழிகளில் ஓர் பார்வை கொடு

காதல் சொல்ல வார்த்தைகளாய்
வந்திருக்கிறேன் உன்
செவிகளில் ஓர் வழியை கொடு

காதல் சொல்ல இசையாய்
வந்திருக்கிறேன் உன்
கரங்களில் ஓர் தாளம் கொடு

காதல் சொல்ல மலராய்
வந்திருக்கிறேன் உன்
கூந்தலில் ஓர் இடம் கொடு

காதல் சொல்ல ஓவியமாய்
வந்திருக்கிறேன் உன்
புன்னகையால் பல வண்ணம் கொடு

காதல் சொல்ல பக்தனாய்
வந்திருக்கிறேன் உன்
வார்த்தைகளால் ஓர் வரம் கொடு

காதல் சொல்ல அடிமையாய்
வந்திருக்கிறேன் உன்
விழிகளால் ஓர் ஆணையிடு

மொத்தமாய்
என்னையே தர வந்திருக்கிறேன்
உன் இதய வாசலைத் திறந்து விடு
நான் வசிக்க நீங்கா இடம் கொடு

உபேந்திரன், ஈரோடு

எழுதியவர் : உபேந்திரன், ஈரோடு (26-Feb-17, 2:46 pm)
சேர்த்தது : உபேந்திரன்
பார்வை : 175

மேலே