எம்ஆர் தடுப்பூசி போடுவீரே

இருவிகற்ப நேரிசை வெண்பா

எம்ஆர் தடுப்பூசி போடுவதில் எந்தவொரு
வம்புமில்லை தும்புமில்லை நல்லதொரு - செம்மையான
நோய்த்தடுப்பு வெற்றி நெறிமுறைதான்; வீணாக
ஆய்தலும் தேவையில்லை யே! 1

கலித்துறை (மா காய் மா காய் காய் வாய்பாடு)

எம்ஆர் தடுப்பூசி பள்ளிக் குழந்தைக்குப் போடுவதில்
எந்த வொருபின்வி ளைவும் ஏற்படாது என்றேதான்
சிந்தை தனில்வேத னையும் வேண்டாமே நன்மையது
வந்து நமைத்தழுவும் அம்மா! தடுப்பூசி போடுவீரே! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Feb-17, 3:42 pm)
பார்வை : 191

மேலே