என் அழகியே

நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்தேன். முதலில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. சில நாட்கள் சென்ற பிறகு தான் நண்பர்கள் கிடைத்தார்கள்.

தினமும் வகுப்பிற்கு தாமதமாக செல்வது தான் என் பழக்கம். ஒரு நாள் வழக்கம் போல வகுப்பிற்கு தாமதமாக சென்றேன். அப்பொழுது என்னுடன் ஒரு பெண்ணும் வகுப்பிற்கு தாமதமாக வந்தாள். அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

வகுப்பினுள் சென்று அமர்ந்ததும். என் கண்கள் அவளை தேட தொடங்கிவிட்டன. அவளை பார்த்ததும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

மறுநாளும் வகுப்பிற்கு தாமதமாக தான் வந்தேன். வந்தவுடன் அவளை பார்த்தேன், நேற்றை விட இன்று அழகாக இருந்தாள், அவளின் கண்கள் என்னை இழுத்து கட்டிப்போட்டு விட்டது. அவளின் சிரிப்பு என்னை தலை கீழாய் திருப்பி போட்டது.

கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு சென்றேன். அவளின் நினைப்பாகவே இருந்தது. அவளின் கண்களும், அவளின் சிரிப்பும் என் மனதினுள் ஆழமாக பதிந்து விட்டது. எப்பொழுதும் கல்லூரிக்கு தாமதமாக சென்ற நான், மறுநாள் அவளை பார்பதற்காகவே சீக்கிரம் சென்று அவள் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.

அவள் வந்தாள், நான் அவளின் அழகிய கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் பார்ப்பதை அவள் கவனித்து விட்டாள் இருந்தாலும் நான் அவளின் அழகையே ரசித்துக்கொண்டு இருந்தேன். நான் பார்கிறேனா இல்லையா என்று அவள் ஓரக்கண்ணால் என்னை பார்த்தாள். அவளின் அந்த பார்வை, என்னை வேறு உலகத்துக்கு அழைத்து சென்றது.
..............
அவள் கண்கள் என்னை வென்றது
அவள் இதழ்கள் என்னை கொன்றது
அவள் சிரிப்பு என்னை கவர்ந்தது!!!...

அழகின் மறுபெயர் நீ
அமைதியின் மறுஉருவம் நான்
காதலுக்கு புதுப்பெயர் நாம்!..
................
எனக்கு அவள் மீது இருப்பது என்ன? கவிதை எல்லாம் எழுதுகிறேன் வேறென்ன இருக்க முடியும் காதல் தான். இப்படியே என் காதல் இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.

இப்பொழுது மூன்றாம் ஆண்டு(கடைசி ஆண்டு). எப்பொழுதும் வகுப்பிற்கு அவளை பார்ப்பதற்காக சீக்கிரமாக வந்து விடுவேன். ஆனால் இன்று வகுப்பிற்கு செல்ல தாமதமாகி விட்டது. தாமதமாக வந்ததால் ஆசிரியர் என்னை முதல் வரிசையில் அமரவைத்து விட்டார். அவளும் வகுப்பிற்கு தாமதமாக வந்தால்.

தாமதமாக வந்ததால் அவளும் முதல் வரிசையில் அமர்ந்தாள். அதுவும் என் பக்கத்திலையே அமர்ந்தாள். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருந்தது. அவள் என் பக்கத்தில் இருந்தும் அவளின் கண்களை என்னால் பார்க்க முடிய வில்லை அவளின் அழகை என்னால் ரசிக்க முடியவில்லை.

கடைசி ஆண்டு என்பதால் எங்களுக்கு கல்லூரியில் பேர்வெல்(farewell) பங்ஷன்(function) நடைபெற்றது. இன்று என் காதலை அவளிடம் கூற கல்லூரி வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன்.

அவள் வந்தால். பங்ஷன் என்பதால் அவள் புடவை அணிந்திருந்தாள். புடவையில் அவளின் அழகை பார்த்ததும் என்னையே மறந்தேன். அவளின் கண்களை பார்த்துக்கொண்டே அவளிடம் என் காதலை சொல்ல சென்றேன். பதட்டத்தில் கைகளும் கால்களும் நடுங்க ஆரம்பித்தது. அவளின் அழகிய சிரிப்பை நினைத்துக்கொண்டேன் அது எனக்கு தைரியத்தை கொடுத்தது.

அவளிடம் நான் முதல் முறையாய் பேசினேன் "இனி உன் அருகில் இருந்து உன் அழகை ரசிக்க ஆசை படுகிறேன், நான் உன்னை காதலிக்கிறேன்" என்று கூறினேன். அதற்க்கு அவள் சிரித்து கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

அவளின் சிரிப்பிற்கு என்ன அர்த்தம்? அவளிடமே கேட்டேன். அதற்கு அவள் "இதை சொல்ல உனக்கு மூன்று வருடம் தேவைப்பட்டதை நினைத்து சிரித்தேன்" எனக் கூறினால். சந்தோஷத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளை கட்டி அணைத்து அவளின் மொத்த சிரிப்பிற்கும் அவளின் இதழிடமே முத்தமிட்டு பதில் கேட்க துவங்கினேன்.

எழுதியவர் : சரவணன் (26-Feb-17, 3:49 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : en azhakiye
பார்வை : 721

மேலே