ஆண் அழகன்

சின்ன சின்ன கண் அழகா
சிரிக்கும் போது
இன்னும் அழகா...

அரும்பு மீசை உனக்கழகா
உன் ஆண்மைக்கு
அது பேரழகா...

சீனி மிட்டாய் சிரிப்பழகா
அது சிதறும் போது
இதழ் அழகா...

மதயானை தோற்றம் அழகா
அதில் மயங்கி விழுந்த
என் பெண்மை அழகா...

கம்பீர நடை நடக்கும் காளையே.!

அழகே அழகாய் பிறந்த
நீநீநீ.......
அண் அழகன்...

எழுதியவர் : விஜிவிஜயன் (26-Feb-17, 6:34 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : an azhakan
பார்வை : 3499

மேலே