அளியா

ஏண்டா மவனே முத்துமாரி, உம் பொண்ணுக்கு

என்ன பேரு வைக்கறதுன்னு நீயும்

மங்கையும் முடிவு பண்ணீட்டாங்களா?

@@@#@#

பண்ணீயாச்சும்மா.

@@@@@@@@@
அந்தப் பேரச் சீக்கிரம் சொல்லுடா

முத்துமாரி.

எஞ் செல்லப் பேத்தியோட பேரத்

தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையா

இருக்கறண்டா மாரி.

ஃஃஃஃஃஃஃஃஃ
அம்மா, பாப்பா பொறந்த அடுத்த

நாளே நம்ம குடும்ப சோதிடர்

இஷ்டலிங்கத்தக் கலந்து

ஆலோசிச்சேன். நமக்கு ராசியான

எண்கணித சோதிடர்

எட்டியப்பராசாவையும் பாத்து பாப்பா

பொறந்த நேரம் எல்லாம்

சொல்லீட்டேன். ரண்டு பேருமே ஒரே

கருத்தச் சொன்னாங்க.

@@@@@
அவுங்க என்ன சொன்னாங்கன்னு

சீக்கிரம் சொல்லுடா மாரி.

ஃஃஃஃஃஃ

"உங்க பொண்ணு உலக அழகிப்

போட்டில கலந்து வெற்றிபெற

வாய்ப்பே இருக்கு. அது படிச்சிட்டு

இருக்கும் போதே திரைப்படத்தில

நடிக்க வாய்ப்பு உங்க கதவத்தட்டும்.

அவ வடக்க போயி ஹேமாமாலினி

வைஜெயந்திமாலாவைவிட பெரிய

நடிகையா வருவா. அதனால

உங்களுக்குப் பிடிச்ச அழகான

முன்னேறி வரும் ஒரே இளம்

நடிகையோட பேர வச்சிருங்க" -ன்னு

ரண்டு சோதிடர்களும்

சொன்னாங்கம்மா.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சரிடா அது எந்த நடிகைடா?

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சொல்லறம்மா, சொல்லறேன். நேத்து

தொலைக் காட்சி விளம்பரத்தில வந்த

ஒரே பொண்ணக் காட்டுனனே

ஞாபகம் இருக்குதாம்மா?

ஃஃஃஃஃஃஃ

ஆமா. செவச் செவனு கனிஞ்ச

நாட்டுத் தக்காளி மாதிரி எளம் வயசு

பொண்ணா இருந்தாளே அவளா?

ஃஃஃஃஃஃ

அம்மா, அந்தப் பொண்ணேதாம்மா.

அந்த பொண்ணு பேரு அளியா

பட்டும்மா (Alia Bhatt).

@@###@@@@

என்னடா பேரு, பட்டுத்துணியக்

குறிக்கற மாதிரி இருக்குது.

காஞ்சிபுரம் பட்டு, திருபுவனம்,

காசிப்பட்டுங்கற மாதிரி அது என்ன

அளியாங்கற ஊருல தயாரிக்கற

பட்டடாடா மகனே முத்துமாரி?

@@###

இல்லம்மா. அந்தப் பொண்ணு பேரு

அளியா. பட்டுங்கறது அந்த

பொண்ணோட அப்பா பேருகூட

இருக்கற சாதிப் பேரு.

ஃஃஃஃஃ

என்னடா மவனே, நம்ம தமிழ்

சனங்கள்ல படிச்சவங்க எல்லாம்

அவுங்க பேரோட அவுங்க சாதிப் பேர

ஒட்டிக்கறத அவமானமா

நெனைக்கறாங்க. அந்த

பொண்ணோட அப்பா எந்த

மாநிலத்துக்கார ஆளுடா மாரி?

@@@@@@

அம்மா நம்ம தமிழ்நாடு, புதுச்சேரி

தவிர மத்த மாநிலத்தில இருக்கிற

90% அரசியல் தலைவர்கள், பிரபல

நடிகர்கள், விளையாட்டு வீரர்கள்,

அறிவியல் மேதைகள், ஆசிரியர்கள்

பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள்,

மருத்துவர்கள், பொறியாளர்கள்,

படிக்காதவங்க - எல்லாம் அவுங்க

பேருங்ககூட சாதிப் பேருங்க அல்லது

குடும்பப் பேருங்களோட சாதிப்

பேருங்களயும் வச்சுக்குவாங்க. அந்த

வழக்கத்துக்கு

விதிவிலக்கா பீகார் முதலமைச்சர்

நிதீஷ் குமார் மாதிரி 5 அல்லது 10%ம்

பேருதான் சாதிப்பேர அவுங்க

பேருங்ககூட ஒட்டிக்கறதில்லம்மா.

அளியாவோட அப்பா,

உச்சநீதிமன்ற

உத்தரவையும் மதிக்காம காவேரி

ஆத்துல தண்ணீரத் திறந்துவிட

மறுக்கிற கன்னடம் பேசற கர்நாடகா

மாநிலத்தச் சேர்ந்தவரும்மா. அங்க

பிராமணர்கள்ல ஒரு பிரிவைச்

சேர்ந்தவரும்மா அளியாவோட அப்பா

பட்டு. அந்தப் பிரிவைச்

சேர்ந்தவங்க எல்லாம் அவுங்க

பேருகூட "பட்'டுன்னு சாதிப் பேரச்

சேத்து வச்சுக்குவாங்க. அளியாங்கற

பேருக்கு அழகான பல அர்த்தம்

எல்லாம் இருக்குதும்மா.

ஃஃஃஃஃஃ

ஏஞ் செல்லப் பேத்தி எம் மூச்சு

அடங்கறதுக்குள்ள கோடி கோடியா


சம்பாதிக்கற பெரிய நடிகையா

வருனும்ன்னு நம்ம குலதெய்வம்.

புட்லாயம்மனையும்

தீப்பாஞ்சம்மனையும்

வேண்டிக்கறண்டா மாரி. அவள

சினிமா ரசிகர் எல்லாம்

இதயதெய்வம்மா ஏத்துக்கணுண்டா

மாரிக்கண்ணு.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மாரி = மழை

புட்லாயம்மன் = புற்றில்

குடிகொண்டிருக்கும் அம்மன்

(புதுச்சேரி நகரில் சில இடங்களில்

சாலையோரம் அமைந்துள்ள சிறு

ஆலயங்கள்)

புதுச்சேரி நகரிலிருந்து பாண்டிச்சேரி

பல்கலைக்கழகம் செல்லும் கிழக்கு

கடற்கரை சாலையோரம் இடது பக்கம்

அமைந்துள்ள சிறு ஆலயம்

தீப்பாஞ்சம்மன் கோவில்.

@@##@#######

Alia, Bhatt இரண்டிற்கும் உள்ள

அர்த்தங்களை கூகுலில் பார்க்கவும்.

எழுதியவர் : மலர் (26-Feb-17, 6:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 247

மேலே