மனதை ஒருமுகப்படுத்தும் மாபெரும் ரகசியம்…

சிலர் தங்களுடைய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை..என்று அல்லல்படுவதை காணலாம்..

மனதை கட்டுபடுத்தும் சக்தி என்பது உண்மையில் நம்மிடம்தான் உள்ளது.. வெளியில் எங்கும் இல்லை..

எண்ணத்தின் மதிப்பை உணராதவரை மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வருவது கடினம்..உங்கள் மதிப்பை உணராத மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை..அதாவது உங்கள் மனம் உங்களையே மதிக்கவில்லை.. அதனால்தான் உங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.

யாரவது மதிப்பிற்குரியவர் வந்தால் அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம் அல்லவா.. ஆனால்,உங்களின் மனமே உங்களை மதிக்காத பொழுது மற்றவர்களிடம் எப்படி உங்களுக்கு மதிப்பு கிடைக்கும்..

உதாரணமாக உங்கள் கைகளுக்கு சொம்பில் தண்ணீர் எடுக்க உத்தரவு இடுகின்றீர்கள்..அந்த கை அதற்க்கு கீழ் படிந்து எடுப்பதால் அந்த நீரை அருந்தி மகிழ்கின்றீர்கள், ஏனென்றால் நீரின் மதிப்பு தெரிந்திருக்கின்றது அதனால் கை உதவுகின்றது..

அதை போல நல்ல எண்ணங்களின் மதிப்பை உணராதவரை
மனம் நாலாபுறமும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.இந்த அலைபாயும் மனதில் வீண் எண்ணங்களும்..

தீய எண்ணங்களும் கட்டுக் கடங்காமல் வரும்.. இதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்மையில் நம்மிடம்தான் இருக்கின்றது..ஒரு பச்சைமிளகாயை வாயின் அருகில் கொண்டு செல்லும்பொழுது மனம் உடனே ப்ரேக் போடுகின்றது..ஏனென்றால் காரம்..மனம் கட்டுப்படவில்லை என்பவர்களுக்கு இது மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் வருகின்றது..

ஆச்சரியம்.. உதாரணமாக ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்..பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்ட பிறகு பணத்தை கொடுக்க முற்பட்ட பொழுது பணத்தை காணவில்லை என்றால்..அவர் வீட்டிலிருந்து வந்த வழியே திரும்ப சென்று தேடிக்கொண்டு இருப்பார்..பலர் இடையில் அவரிடம் பேசினாலும் அவருடைய மனம் பணத்திலிருந்து கொஞ்சமும் அசையாது..

அப்பொழுது மனதில் பணத்தின் படம் மட்டுமே தென்பட்டு கொண்டிருக்கும்..ஏனென்றால் பணத்தின் மதிப்பை அவர் உணர்ந்து இருக்கின்றார்.. அதனால் அவருடைய மனம் அதிலிருந்து விடுபட மறுக்கின்றது.. இப்பொழுது மனம் எப்படி கட்டுப்பாட்டில் வந்தது ஆச்சரியமாக உள்ளது அல்லவா?!

சரி அது போகட்டும்.. புதிதாக ஒரு நெக்லஸ் உங்கள் மனைவிக்கு வாங்கி வந்துள்ளீர்கள்.. அதை வீட்டின் வாசலில் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது உங்கள் நண்பர் அவசரமாக செல்லவேண்டும் உடனே வாருங்கள் உங்களிடம் முக்கிய விஷயம் ஒன்று சொல்ல வேண்டும் என்று அழைக்கின்றார்.. வேறு வழியில்லாமல் அந்த நெக்லசை உங்கள் வீட்டு வாசற்படியில் வைத்துவிட்டு உங்கள் நண்பரை பார்க்கசெல்கின்றீர்கள்..

அப்பொழுது உங்கள் நண்பரிடம் நீங்கள் பேசிக்கொண்டு இருந்தாலும் உங்கள் மனம் நகை மீது தானே இருக்கும்..மனதை இப்படி,அப்படி அசைய சொல்லுங்கள் பார்க்கலாம் கண்டிப்பாக அசையாது.. ஏனென்றால் தங்கத்தின் மதிப்பை மனம் அறிந்திருக்கின்றது..அதனால் அது அசைவதில்லை..மதிப்புள்ள ஒரு பொருளை மனம் அறிந்தால் மனம் அதற்க்கு கட்டுப் படுகின்றது எனவே நல்ல எண்ணங்களின் மதிப்பையும்..சுபமான எண்ணங்களின் மதிப்பையும் மனம் அறிந்திருக்கவேண்டும்.. அப்படி இலாத மனம் கடிவாளம் இல்லாத குதிரைபோல ஆகிவிடும்..

கடவுளை நீங்கள் நினைக்க வேண்டுமானாலும் கடவுளின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் அவரிடத்தில் ஈடுபடாது..உங்களின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் உங்களுக்கு கட்டுப்படாது..ஒரு பணியாரக் கல்லை புதிதாக வாங்குபவரே அதை பணியாரம் சுடுவதற்கு பழக்கவேண்டும் என்று சொன்னால்..உங்கள் மனதை எப்படி பழக்கவேண்டும் என்று யோசித்துபாருங்கள்..

மதிப்பை உணர்ந்தவரே மகான் ஆகின்றார்..எனவே உங்கள் ஆத்மாவின் மதிப்பை உணருங்கள்..உங்கள் ஆத்மாவின் தந்தை சிவபரமாத்மாவின் மதிப்பை உணருங்கள்..

இந்த நேரத்தின் மதிப்பை உணருங்கள்..உங்களையும்..உங்கள் எதிர் காலத்தையும் மதிப்புள்ளதாக இப்பொழுதே மாற்றிக்கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (26-Feb-17, 7:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 632

மேலே