காக்கும் தெய்வமாய் வந்த கைப்பேசி - கவிதைத் தரும் சிறு கதை

கடத்தல்காரர்கள் அவனை
திருடி எடுத்துவந்த
சொகுசு வாகனத்தில் எங்கோ
கண் காணா இடத்திற்கு
கடத்தி சென்றுகொண்டிருந்தனர்
அவனைப் பணயம் வைத்து
சில கோடி காசு சம்பாதிக்க ;
அவனுக்கோ விதி கெட்டி-அது
கடத்தியவர்களுக்கு தெரியாது
மாநகரைக் கடந்து அந்த
நெடுஞ்சாலையில் அதி வேகத்தில்
சென்றுகொண்டிருக்கையில்
எதிரே எதிர்ப்பு பார்க்காமல்
குறுக்கே வந்த காளையை தவிர்க்க
ஓட்டுநர் கடத்தல்காரன்
பிரேக்கை அழுத்த -வண்டி
ஒரு குட்டிக்கரணம் அடித்து
கவிழ்ந்து நெடுஞ்சாலை ஓரம்
குப்புறப் படுத்தது -கடத்தல் காரர்
மூவரும் உயிர் இழக்க
கடத்தப் பட்டவன் சிறு
காயத்துடன் வண்டியிலிருந்து
வீசப்ப பட்டு அடர்ந்த
புல் படுக்கையும் தரையில்
ஏறியப்பட்டான்; விதி அவன் பக்கம் ;
விழுந்த சிறிது நேரத்திலேயே
கண் விழித்து கொண்டான்
நெடுஞ்சாலை நியான் விளக்கு
வெளிச்சத்தில் தனக்கு என்ன
நேர்ந்தது என்பதைப் புரிந்துகொண்டான்
பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு
கைப்பேசியைத் தேடினான் -இல்லை ;
அப்போது அவன் காலில் ஏதோ
தடுபட, கைவைத்து பார்த்தான்
அது உறைந்துபோன உயிரில்லா
கடத்தல்காரன் ஒருவனின் உடல்
அவன் சட்டைப்பையில் தன
கைப்பேசி இருப்பதைப் பார்த்து
இவன் சற்றே திகைத்து பின்
சுதாரித்துக் கொண்டான் -அந்த
இவன் கைப் பேசி இவன் கைக்கே
வந்தது இப்போது!
அதில் அவன் செய்த முதல் "கால்"
அவன் மனைவிக்கு -தன்னைப் பற்றியும்
தான் கடத்தப் பட்டதையும் சுருக்கி விளக்கி
நிலைமையை எடுத்துக் கூறினான்
தான் எங்கு இருப்பதையும் கைபேசி
ஜீ.பீ.எஸ். மூலம் தெரிந்துகொண்டு
தெரிவித்தான் -இவ்வளவில் பக்கத்துக்கு
கிராமத்து மக்கள் வந்து இவன் மூலம்
எல்லாம் அறிந்து ,உதவி செய்வதில்
தீவிரம் ஆயினர்; இவ்வளவில்
காவல் படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர்
விபத்தில் நொறுங்கிய வண்டியிலிருந்து
இரண்டு சடலங்களை மீட்டனர்
அவர்கள் முகத்தை உற்று நோக்க
இன்ஸ்பெக்டர் அசந்து போயினார்
அந்த இரு உடலும் இவர்கள் தேடி
அலையும் கொள்ளைகூடத் தலைவரும்
அவர் சகாவும்; மூன்றாவது உடல்
இவர்கள் திருடிய வாகன ஒட்டி!
கடத்தப் பட்ட நபர் ஜெமீல்
அரபு நாட்டில் வேலை செய்யும் இந்தியர் ,தமிழர்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு
விடுமுறையில் வீடு திரும்புகையில்
விமான நிலையத்திலிருந்து கடத்தப் பட்டார் !

கடத்தல் காரர்கள் ஒன்று நினைக்க
விதி வேறொன்று நினைத்தது போலும்!
ஜெமீல் உயிருடன் தான் கொணர்ந்த
அத்தனைப் பொருட்களுடனும் இல்லம்
திரும்பினான்

இத்தனையும் சாத்தியமானது
பத்திரமாய் அவன் கையில் கிடைத்த
கடத்தல்காரர்கள் இவனிடமிருந்த
பிடுங்கி வைத்துக் கொண்ட அந்த
இவன் கைப்பேசி !
காக்கும் தெய்வமாய் வந்த கைப் பேசி
அவன் வணக்கம் தெய்வத்தின் துணையால்
விதியும் இவன் பக்கம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Feb-17, 9:04 pm)
பார்வை : 283

மேலே