காணாதவன் போல் ஏன் நடித்தேன்

அவள் கையால் பிண்ணப்பட்ட
கருங்கூந்தலில் எனைவளைக்கும்
சிவப்பு சடைவளை…

அவள் கடந்து செல்லும்போது
என்காதுகளில் இசைக்கும்
கால்களின் கொலுசுகள்…

யாரிடமோ அவள் பேசும்போது
எதற்கென்றுதெரியாமல் அழகாய்
அசைந்தாடும் காதணி...

அவ்வப்போது மலர்களின்
பருவங்களை விளக்கிடும் வகையில்
புன்னகைக்கும் இதழ்கள்...

யாரோ இருவர் மறைவில்
அவள் கயல்கள் மறைந்திருக்க
எனைநோக்கி வளைந்த புருவங்கள்...

என்னை எப்பொழுதும்
தவிர்த்துவிட்டு தவிக்கவிட்டு செல்லும்
மைபூசிய கயல்கள்...

பல நாட்கள் கழித்து
அவள் காணாத வகையில்
நான் கண்டேன்…

இத்தனைக்கும் எவ்வளவோ நாள்
ஏங்கித்தவித்த நான் ஏனோ
எந்த சலனமும் இல்லாமல்
என் கண்களுக்கு அருகில் கிடைத்தும்
காணாதவன்போல் நடித்துவிட்டு
கல்நெஞ்சக்காரனாய் இருந்துவிட்டேன்...

அவள் இமைகளிலோ இதழ்களிலோ
எனைவிரும்புவதற்கு அறிகுறிகள்
காணும் வரை நான்
நடித்துக்கொண்டே இருப்பேன்
அவளைக் காணாதவன் போலவே...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (26-Feb-17, 10:18 pm)
பார்வை : 115

மேலே